திருச்சியில் "அமிர்தத்துளி" இயக்கம் தொடர்பாக சுகாதார விழிப்புணர்வு நடைபயணம்- மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்

திருச்சியில் "அமிர்தத்துளி" இயக்கம் தொடர்பாக சுகாதார விழிப்புணர்வு நடைபயணம்-  மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், நவலூர் குட்டப்பட்டு ஊராட்சியில் "அமிர்தத்துளி" இயக்கம் தொடர்பாக பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக் விழிப்புனர்வு நடைபயணத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு இன்று (04.04.2022) தொடங்கி வைத்து கிராம மக்களுடன் நடை பயணம் மேற்கொண்டார்,.கழிவு நீர் மேண்மை வசதிகளை உள்ளடக்கிய குக்கிராம அளவிலான வரைபடம் தயர் செய்யப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு அதனை செயல்படுத்திட அறிவுரை வழங்கினார். 

மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நட்டதுடன் அங்கு நடைபெற்ற பலவேறு விழிப்புணாவு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் திட்டஇயக்குநர் வே.பிச்சை, செயற்பொறியாளர்(ஊ.வ) சங்கரஜோதி,ஒன்றியக்குழுத் தலைவர் .கமலம் கருப்பையா, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் .ரா.நந்தகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்ஸ்ரீதர், நிர்மலா மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்ததாவது :

கிராமப் புறங்களில் நீர் மேலாண்மை இயக்கம் 100 நாள் கொண்டாட்டம் எனும் நிகழ்வின் கீழ் நீர்நிலைகள் மாசடைதல் மற்றும் நீர் மேலாண்மை முக்கியத்துவத்தை மக்களிடையே கொண்டு செல்லவும், கிராம ஊராட்சிகள் ODF Plus - Model என்று நிலையினை அடைந்திடவும் தொடங்கப்பட்ட "அமிர்தத்துளி" இயக்கத்தினை சிறந்த முறையில் பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தூய்மை பாரத் இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சிகளில் "நீரின்றி அமையாது உலகு" "அமிர்தத்துளி" என்னும் நீர் மேலாண்மை இயக்கம்மாபெரும் மக்கள் இயக்கமாக ஏப்ரல் திங்கள் 1-ஆம் தேதி முதல் 100 நாட்களுக்கு நடத்தப்படுகிறது.இவ்வியக்கத்தின் மூலம் நீர் சேமிப்பின் முக்கியத்துவம், கழிவு நீ மேலாண்மை, சுத்திகரிக்கப்பட்ட நீரின்

மறு பயன்பாட்டை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் பற்றி கிராம மக்களிடையே விழிப்புணர்வுஏற்படுத்தி இவ்வியக்கத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களின் எந்த இடத்திலும் கழிவு நீர் தேங்காமல்இருந்திடும் வகையில் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து கிராமங்களும் இந்நிகழ்வின் முடிவில் கழிவு நீர்மேலாண்மையில் நிறைவுற்ற நிலையினை அடைந்து, திறந்த வெளியில் மனம் கழிக்கும் பழக்கமற்ற நிலைமற்றும் அதன் கூடுதல் நடவடிக்கைகளான திட மற்றும் திரவம் கழிவு மேலாண்மையில் முன் மாதிரிகிராமமாக (ODF Plus Model) திகழ்ந்திட வேண்டி அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

 இவ்வியக்கத்தின் ஒரு பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சிகளில் உள்ள ஏதேனும் ஒரு நீர் நிலையினை தூய்மைப்படுத்திட நடவடிக்கை மேற்கொண்டு 100 நாட்களுக்குள் பணிகளை முடிக்க வேண்டும், சுத்திகரிக்கப்படாத கழிவு நீர்நேரடியாகச் சென்று நீர் நிலைகளில் கலப்பதைத் தடுக்க வேண்டும். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடப்பாண்டின் கழிவுநீர் மேலாண்மையில் நிறைவுற்ற நிலையினைஅடைந்திட முன்மாதிரி கிராமங்களாக மாற்றம் செய்திட 47 கிராம் ஊராட்சிகள் நேர்வு செய்யப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்பட்டுள்ள கிராம ஊராட்சிகளில் அடிப்படை தரவுகள் சேகரிப்பு எனும் நடவடிக்கைகளின்கீழ் 04.04.2002 அன்று கிராம மக்களுடன் சுகாதார நடைபயணம் மேற்கொள்ஞதல், 06.04.2022 அன்று கழிவு நீர் மேலாண்மை வசதிகளை உள்ளடக்கிய குக்கிராம அளவிலான வரைபடத்தை தயார் செய்தல், 08.04.2022 அன்று தேவைப்படும் கழிவு நீர் மேலாண்மை வாதிகளை திட்டமிடுதல் மற்றும் 11.04.2022 அன்று தீர்மானிக்கப்பட்ட பணிகளுக்கு நிதி ஆதாரத்தினை உறுதி செய்தல் போன்ற நிகழ்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது. 

இந்த நடவடிக்கைகள் மூலம் பெறப்பட்ட தரவுகளைக் கொண்டு கழிவு நீர் மேலாண்மையின் நிறைவுற்ற நிலையினை அடைவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு தேவைப்படும் தனி நபர் உறிஞ்சுக்குழிகள், சமுதாய உறிஞ்சுக்குழிகள் மற்றும் கிடைமட்ட/செங்குத்து வடிகட்டிகள் அமைக்கப்பட உள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO