வளர்ப்பு பிராணிகளையும், மனிதர்களையும் துரத்திக் கடிக்கும் தெருநாய்கள் - மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 58வது வார்டு ரங்கா நகர் 2வது தெருவில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக தெருவில் நடந்து செல்லுபவர்களை குரைத்து துரத்தி வருகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளில் வளர்த்து வரும் செல்ல பிராணிகளை தெருநாய்கள் கடித்து கொல்கிறது.
இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர். இதுமட்டுமின்றி நள்ளிரவு நேரங்களில் தனியாக வருபவர்களை துரத்தி கடித்து காயப்படுத்துகிறது. இதனால் அப்பகுதியில் இரவு நேரத்தில் பொதுமக்கள் நடமாடுவதை தவிர்த்து உள்ளனர். இது குறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரியிடம் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
செல்ல பிராணிகளை தெருநாய்கள் கடித்து கொல்வதால் அப்பகுதி மக்கள் மிகுந்த மன வருத்ததில் உள்ளனர்.மனித உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தெருநாய்களை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision