நானும் 50பைசா ஒரு ரூபாய்க்கு சைக்கிள் ஓட்டி உள்ளேன்-அமைச்சர் மாணவர்களிடம் பேச்சு
தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (6.9.22) திருச்சிராப்பள்ளி மாவட்டம்,வையம்பட்டி ஒன்றியம், நடுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் 182 மாணவ, மாணவிகளுக்கு ரூபாய் 9 இலட்சத்து 25 ஆயிரம். மதிப்பிலான இலவச மிதிவண்டிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பாதி பெற்றோர்களாக ஆசிரியர்களும் பாதி ஆசிரியர்களாக பெற்றவுடன் இருக்க வேண்டும். மாணவர்கள் ஆசிரியர்கள் கண்டிப்பதை தங்களின் நல்வழிப்படுத்த என்பதை உணர வேண்டும். மாவட்ட ஆட்சியர் குறிப்பிடுவது போல தன்னுடைய காலத்தில் இருசக்கர வாகனம் என்பது நம்பிக்கை என குறிப்பிட்டு இருந்தார். நானும் 50 பைசா ஒரு ரூபாய்க்கு மணி கணக்கில் இருசக்கர வாகனத்தை எடுத்து ஓட்டிய காலமும் உண்டு.
ஆசிரியர்கள் மாணவர்களின் ஏணிப்படியாக இருக்க வேண்டும். மாணவர்கள் ஆசிரியர்கள் கண்டிப்பது வேறு விதமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நீங்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்பது அவர்களின் எண்ணம். ஆசிரியர்கள் தங்களின் குழந்தைகளிடம் நேரம் செலவழிப்பதை விட உங்களிடம் தான் அதிக நேரம் செலவழிக்கிறார்கள் என குறிப்பிட்டு பேசினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி ,ஒன்றியக்
குழுத் தலைவர், குணசீலன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO