அரசு மணல் குவாரிகளை விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருச்சி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நலச்சங்கம் மற்றும் துறையூர் தொகுதி டிப்பர் லாரி எர்த் மூவர்ஸ் உரிமையாளர் சங்கங்கள் இணையும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேலன தலைவர் செல்வ ராஜாமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்பொழுது பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டையின்போது
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அரசு மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக லாரிகளில் லோடு ஏற்றுவதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது முதல் குவாரிகள் திறக்கப்படவில்லை இதனால் வேறு வழி இல்லாமல் M sand P sand மணல் பயன்படுத்தும் சூழலில் கல்குவாரி உரிமையாளர்கள் சர்வாதிகாரப் போக்குடன் நடந்து கொள்வதாகவும்
விலை ஏற்றம் அதிகமாக இருப்பதாகவும்
கலைஞர் கனவு திட்டத்தின் கீழ் வீடு கட்டும் ஏழைகள் இதனால் மிகவும் பாதிப்படைந்து உள்ளதாகவும் பேசினார்.
எனவே இதில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் அரசு மணல் குவாரிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.
தொடர்ந்து குவாரிகளை திறக்காத பட்சத்தில் விரைவில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சங்கங்கள் இணைந்து பெரிய அளவில் தமிழக அரசுக்கு கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த போவதாகவும் தெரிவித்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://www.threads.net/@trichy_vision