பிஞ்சு குழந்தைகள் வெகு நேரம் முகக் கவசம் அணிவது குறித்து ஆலோசனை செய்து முடிவு அறிவிக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் திருச்சியில் பேட்டி
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு முன்பாக உள்ள காதி கிராப்ட் விற்பனை மையத்தில் கதர் விற்பனையை துவக்கி வைத்த பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்... தமிழகத்தில் ஏற்கனவே ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவது போல நவம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
ஒரு வகுப்பறையில் 20 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். சுழற்சிமுறையில் வகுப்புகள் நடத்தப்படும். ஒன்றாம் வகுப்பு மாணவன் வெகுநேரம் முகக்கவசம் அணிந்து இருக்க இயலாது. ஆகவே அது தொடர்பாக பின்னர் ஆய்வு செய்து அறிவிக்கப்படும். தற்போதைய நிலையில் பிஞ்சு குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்க வேண்டும் என்பதே நோக்கம் அந்த அடிப்படையில்தான் பள்ளிகள் திறக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 98 சதவீத ஆசிரியர்கள் ஆசிரியர் அல்லாத பள்ளி கல்வித்துறை ஊழியர்கள் தடுப்பூசி முழுமையாக செலுத்தி இருக்கிறார்கள்.
பல்வேறு வியாதிகளுக்கு உட்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் மட்டுமே 2 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்த இயலாத நிலையில் இருக்கிறார்கள். பாடத்திட்டம் குறைப்பு என்பது ஏற்கனவே நடைமுறையில் இருப்பது தான் என்று தெரிவித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn