திருச்சி மாவட்டத்தில் ஆடி மாத ஆன்மீகச் சுற்றுலா மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

திருச்சி மாவட்டத்தில்  ஆடி மாத ஆன்மீகச் சுற்றுலா மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

.திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை நடத்தும் ஆடி மாத ஆன்மீகச் சுற்றுலா மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

திருச்சி மாவட்டத்தில் ஆடி மாதத்தினை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுற்றுலாத்துறையும், இந்துசமய அறநிலையத்துறையும் இணைந்து ஆன்மீகச் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சுற்றுலாவில் அருள்மிகு.வெக்காளியம்மன் திருக்கோயில், உறையூர், அருள்மிகு.கமலவள்ளி நாச்சியார் திருக்கோயில், உறையூர், அருள்மிகு.அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், திருவானைக்காவல், அருள்மிகு. மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம், அருள்மிகு உஜ்ஜயினி ஓம்காளியம்மன் திருக்கோயில்,மாளிக்குடி, அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில், சிறுவாச்சூர், பெரம்பலூர், அருள்மிகு.பொன்னேஸ்வரியம்மன் திருக்கோயில், பொன்மலை,ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான பயணத்தொகை ரூ.1,100/- ஆகும். இச்சுற்றுலா ஓட்டல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திலிருந்து காலை 08.30 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 07.45 மணிக்கு மீண்டும் ஓட்டல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் நிறைவடையும். இதற்கான முன்பதிவினை https://www.ttdconline.com செலுத்துச்சீட்டுடன் (acknowledgement) ஓட்டல் தமிழ்நாடு வளாகத்திற்கு பயண நாளன்று காலை 07.30 மணிக்கு வருகைப்புரிய வேண்டும். இப்பயணத் திட்டம் ஆடி மாதத்தில் ஞாயிறு. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே மேற்கொள்ளப்படும்.

இப்பயணத்தினை மேற்கொள்பவர்களுக்கு சுற்றுலாத்துறையின் மூலம் சிறப்பு அடையாள அட்டைகள் வழங்கப்படும். ஆன்மீகச் சுற்றுலா மேற்கொள்ளும் பக்கதர்களுக்கு திருக்கோயில்களில் பிரசாதப் பை வழங்கப்படும். சிறப்பு மதிய உணவு, விரைவு தரிசனம் மேற்கொள்ளுதல், அவசர மருத்துவ முதலுதவி, தலச்சிறப்பு குறித்த சிற்றட்டை ஆகியவற்றிற்கு செய்யப்பட்டுள்ளன. ஏற்பாடுகள்

மேலும் விவரங்களுக்கு 0431-2414346 மற்றும் 9176995874 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. அனைத்து ஆன்மீக பக்தர்களும் மற்றும் பொது

மக்களும் இச்சுற்றுலாவில் பங்கேற்று பயனடையலாம் என திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித் துள்ளார்.

 .#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision