நவம்பர் 1-ஆம் தேதி பள்ளிகள் திறப்பதில் மாற்றம், மறுபரிசீலனையும் இல்லை - திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி
இந்திய 75 வது ஆண்டு சுதந்திர தின ஓட்டம் ( Fit India Freedom Run 2.0 ) திருச்சியில் நேரு யுவ கேந்திரா, நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் தமிழ்நாடு ஆகியோருடன் இணைந்து, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சமூக இடைவெளியினை பின்பற்றி அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு நடத்தப்பட்டது. ஆரோக்கியமான, தன்னம்பிக்கை உள்ள சமூகத்தை உருவாக்க, அனைவரும் தினமும் 30 நிமிட உடற்பயிற்சிக்கென நேரம் ஒதுக்கிட தங்கள் வாழ்வில் தீர்மானம் மேற்கொள்ளலாம் என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக இன்று சுதந்திர தின ஓட்டம் நடைபெற்றது.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் பழைய தபால் நிலையத்திற்கு முன்பாக அமைந்து இருக்கும் உப்புசத்தியாகிரக நினைவு தூணிற்கு முன்பாக தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தலைமை தாங்கினார். விழாவில் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் , பாரதிதாசன் பல்கலைகழக துணை வேந்தர் முனைவர்.எம்.செல்வம், பல்கலைகழக பதிவாளர் முனைவர் கோபிநாத், நாட்டு நலப்பணித் திட்ட நிகழ்ச்சி அலுவலர் முனைவர் லட்சுமிபிரபா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி கல்வி துறை அமைச்சர்... நவம்பர் 1ஆம் தேதி 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதில் எந்தவித மாற்றமும், மறுபரிசீலனையும் இல்லை. பள்ளிக்கல்வித்துறையில் மாவட்ட கல்வித்துறை அதிகாரி உள்ளிட்டவர்கள் அனைவரையும் கலந்து ஆலோசித்து அறிக்கையை முதல்வரிரிடம் கொடுத்தோம். முதல்வர் மருத்துவ வல்லுநர் குழுவினருடன் கலந்து ஆலோசித்து தான் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் என தெரிவித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn