திருச்சி மாநகராட்சியில் கள்ள ஓட்டு போட்டதாக திமுக வேட்பாளர் மீது எழுந்த புகார் விசாரணை - விரைவில் நடவடிக்கை ஆட்சியர் பேட்டி

திருச்சி மாநகராட்சியில் கள்ள ஓட்டு போட்டதாக திமுக வேட்பாளர் மீது எழுந்த புகார் விசாரணை - விரைவில் நடவடிக்கை ஆட்சியர்  பேட்டி
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர் சந்தித்த ஆட்சியர் சிவராசு நாளை(22.02.2022) வாக்குப்பதிவு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்கும் போது ஒவ்வொரு வார்டு எண்ணிக்கை துவங்கும் போது முதலில் தபால் வாக்குகள் எண்ணி முடித்தவுடன் வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

மாநகராட்சி வார்டு 8 மேசைகளில் இரண்டு சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. குறைந்தபட்சம் 40 நிமிடத்தில் ஒரு வார்டில் முடிவு தெரியவரும். அவர்களுக்கு உடனடியாக சான்றிதழ் வழங்கப்பட்டு  அவருடைய முகவர்களுடன் வெளியேறுவார்கள். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பொறுத்த  திருச்சியில் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

செய்தியாளர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஆட்சியர் திருச்சி மாநகராட்சியில் வாக்குப்பதிவின் போது 56 வார்டு திமுக வேட்பாளர் 2 ஓட்டு போட்டதாக புகார் எழுந்துள்ளது. அப்புகாரின் மீது  விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணையின் முடிவில் உண்மை தன்மை பொறுத்து  மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வாக்கு எண்ணிக்கை முடிவில் மிகப்பெரிய கூட்டமாக எந்த கொண்டாட்டத்திலும் ஈடுபடக்கூடாது. ஏற்கனவே கோவிட் தோற்று பரவல் தடை பாதுகாப்பு அமலில் உள்ளது. 100% தேர்தல் முடிவுகள் நேர்மையாக வெளியிடப்படும் என்றார். திருச்சியில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் புகார் மனு அளித்துள்ளனர். வாக்கு  எண்ணிக்கை மையத்தில் 120 கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாகவும் ஆட்சியர்  குறிப்பிட்டார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn

https://youtu.be/-Mf0j2cDRhI