ராஜகோபுரம் முன்பு உள்ள மண்டபங்கள் ஶ்ரீரங்கம் கோவில் கட்டுப்பாட்டில் வந்தது.

ராஜகோபுரம் முன்பு உள்ள மண்டபங்கள் ஶ்ரீரங்கம் கோவில் கட்டுப்பாட்டில் வந்தது.

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும்,  பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமானது திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில். இக்கோயிவிலில் வருடம் முழுவதும் விழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் ஶ்ரீரங்கம் கோவில் நம்பெருமாள் (உற்சவர்) வருடத்திற்கு ஒரு முறை ராஜகோபுரம்  சாலையிலுள்ள நான்கு கால் மண்டத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இதனையடுத்து மீதமுள்ள நாட்களில் அந்த மண்டபம் கடைகள்  வாடகைக்கு விடப்பட்டிருந்து. இந்த 2 மண்டபத்தில் 4 கடைகளை நடத்தி வருபவர்கள் கோவில் விதிமுறைகளை மீறி செயல்படுவதாக புகார் எழுந்தது.

இதனால் அந்த கடைகளை காலி செய்ய கோவில் நிர்வாகம் தெரிவித்தும் கடை நடத்துபவர்கள் காலி செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதனை தொடர்ந்து ஶ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பில் அம்மா மண்டம் சாலையில் ஸ்ரீரங்கம் காவல் நிலையம் அருகில் கோயிலுக்கு சொந்த 2 நாலுகால் மண்டபத்தில் உள்ள கடைகளை இன்று (30.05.2021) க்குள் காலி செய்ய சென்னை ஐகோர்ட் மதுரை கிளை உத்திரவிட்டது.

ஆனால் கடைகாரர்கள் கடையை காலி செய்யாததால்  இன்று ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி முன்னிலையில் கோயில் ஊழியர்கள் கடைகளை அப்புறப்படுத்தினர். பின்னர் மண்டபத்தை சுற்றிலும் இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு ஶ்ரீரங்கம் கோவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx