திருச்சியில் ஆன்லைனில் மீன் விற்பனையில் அசத்தும் பட்டதாரி மீனவர்

திருச்சியில் ஆன்லைனில் மீன் விற்பனையில் அசத்தும் பட்டதாரி மீனவர்

தூக்கி வீசும் கடல் அலையைக் கண்டாலே மிரளும் மக்களுக்கு மத்தியில் எதிர்நீச்சல் போட்டுச் சென்று கடல் உணவுகளை அள்ளி வருவதிலேயே காலத்தை கழிக்கின்றனர் மீனவர்கள். கடலில் வாழ்க்கையைத் தொடங்கி அங்கேயே சிலரது வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடுகிறது.

ஆனால் மீனவர் என்ற அடையாளத்தைத் தாண்டி தொழில்முனைவர் என்னும் அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளார். ராமேஸ்வரத்தை சேர்ந்த ஆண்டனி கீதன். இன்று இணைய வழியில் மீன்களை விற்பனை செய்யும் தொழில்முனைவராக மாறியுள்ளார். திருச்சி உறையூர் காசி விளங்கி மீன் சந்தைபகுதியில் புதியதாய் "
கட்டமரான்".     என்ற பெயரில் கடையை தொடங்கி ஆன்லைன் மூலம் மீன் விற்பனை செய்து வருகிறார்.

இதுகுறித்து ஆண்டனி கீதன் கூறுகையில்... பொறியியல் பட்டப்படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். என் சமூகம் சார்ந்த தொழிலை தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்து கொண்டே இருந்தது. அதனுடைய தொடக்கமாக தற்போது திருச்சியில் இதனை தொடங்கியுள்ளோம்.

குடும்பத்தில் அனைவருமே மீன்பிடித் தொழிலை சார்ந்தவர்கள் என்பதால் நேரடியாக நாங்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வந்த பின்னர் ஆரோக்கியமான முறையில் சுத்தம் செய்தப்பின் சரியான முறையில் பேக் செய்து வீட்டிற்கு சென்று  விற்பனை செய்து வருகிறோம்.

கடல் உணவுகள்  தற்போது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வரும் நிலையில் காலை மாலை இரண்டு வேளைகளிலும் கிடைக்கும் வகையில் 5 முதல் 7 நபர்கள்  பணியாற்றி வருகிறோம். நேரடியாக நாங்களே சென்று மீன் பிடித்து வருவதால் மீன்களைப் பதப்படுத்தி வைப்பதில்லை. வந்த ஒரு நாளிலேயே மீன்கள் விற்று தீர்ந்து விடும் எனவே உடனடியாக மீன்கள் விற்பனை செய்து வருவதால் மீனின் சுவை மாறாமல் இருக்கும்.

அதே போன்று பல வகை மீன்களை விட அதிக சத்து நிறைந்த மீன்கள் விற்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம். பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் மீன்வகைகளான சங்கரா, வஞ்சிரம், வவ்வால், மத்தி, கெளுத்தி போன்ற மீன் வகைகளை அதிகமாக விற்பனை செய்கிறோம். வாட்ஸ்ஆப் வழியாக தொடர்ந்து நடைபெற்று வரும் விற்பனையானது தனியாக இணையதளம் ஒன்றை உருவாக்கி விற்பனை செய்ய வேண்டும் என்பதே என் லட்சியம் என்கிறார் ஆண்டனி.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn