விலை உயர்வை கண்டித்து திருச்சியில் மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

விலை உயர்வை கண்டித்து திருச்சியில் மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விலை உயர்வை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர் நாள்தோறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த விலைவாசி உயர்வை மத்திய அரசு குறைக்க வேண்டுமென தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சியில் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள பிஎஸ்என்எல் மண்டல அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருடன் வந்து மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசு வழங்கி வந்த உதவித் தொகை 300 ரூபாய் கொரோனா காலத்தில் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த விலைவாசி உயர்வு என்பது மாற்றுத்திறனாளிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் இந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் இல்லையென்றால் மாற்றுத்திறனாளிகள் சங்கம் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தும் என தெரிவித்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO