திருச்சியில் காலியாக உள்ள 80 பணியிடங்களுக்கு 12,500 பேருக்கு நேர்காணல் தொடக்கம்
திருச்சி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு நேர்காணல் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் இன்று தொடங்கியது. திருச்சியில் காலியாக உள்ள 80 பணியிடங்களுக்கு 12,500 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கான நேர்காணல் 11.04.2022 முதல் 13.04.2022 வரை, 18.04.2022 மற்றும் 20.04.2022 முதல் 23.04.2022 வரை திருச்சி - புதுக்கோட்டை மெயின் ரோடு, கொட்டப்பட்டு பகுதியிலுள்ள கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட்டிருந்தது.
அதன்படி இன்று முதற்கட்டமாக 1800 விண்ணப்பதாரர்களுக்கு தேர்காணல் தொடங்கியது. இதில் ஏராளமான பட்டதாரி இளைஞர்கள் கலந்து கொண்டு மாடு பிடித்தும், சைக்கிள் ஓட்டியும் காட்டினர். பின்னர் அவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ககப்பட்டு, பொது அறிவு குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO