சிக்னலை மறைத்த எம்.பி பிளக்ஸ்

சிக்னலை மறைத்த எம்.பி பிளக்ஸ்

நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனால் திருச்சி கண்டோன்மெண்ட் பகுதி முழுவதும் திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் பிறந்தநாள் வாழ்த்து பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் ஆங்காங்கே ஒட்டி உள்ளனர்.

இதில் குறிப்பாக வெஸ்ட்ரி பள்ளி அருகில் மேஜர் சரவணன் நினைவு தூண் ரவுண்டானாவில் திருச்சி சிவாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து பிளக்ஸ் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீதிமன்றத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலை நோக்கி செல்லக்கூடிய வழியில் சிக்னல் கம்பத்தை மறைத்தவாறு பிறந்தநாள் பதாகை வைக்கப்பட்டுள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். அந்த ரவுண்டானாவில் பாதுகாப்பு பணியில் இருக்கும் போக்குவரத்து காவலர்கள் இதை ஏன் கண்டு கொள்ளவில்லை? வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் அந்த பிறந்தநாள் வாழ்த்து ப்ளக்ஸ்-ஐ போக்குவரத்து காவலர்கள் அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn