ஆங்கிலேயரின் பஞ்சு கிடங்கை வெடிக்க வைத்த வீரத்தாய் குயிலுக்கு திருச்சியில் வீரவணக்கம்!

ஆங்கிலேயரின் பஞ்சு கிடங்கை வெடிக்க வைத்த வீரத்தாய் குயிலுக்கு திருச்சியில் வீரவணக்கம்!

ஆங்கிலேயரின் பஞ்சு கிடங்கை வெடிக்க செய்த வீரத்தாய் குயிலுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு இன்று திருச்சியில் நடைபெற்றது.

Advertisement

ஆதித்தமிழர் தூய்மை தொழிலாளர் பேரவை சார்பாக திருச்சி பீமநகர் பஞ்சு கிடங்கு பகுதியிலும் மற்றும் தமிழ்ப் புலிகள் கட்சியின் சார்பாக மத்திய பேருந்து நிலையத்திலும் வெள்ளையர் ஆயுதக் கிடங்கை வெடிக்கச் செய்த வீரத்தாய் குயிலி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஆதித்தமிழர்தூய்மை தொழிலாளர் பேரவை மாவட்ட செயலாளர் அறிவழகன் மற்றும் மாவட்ட துணை தலைவர் வள்ளி, ஆதித்தமிழர் தூய்மை தொழிலாளர் பேரவை ஜான்சிராணி மாவட்ட பொருளாளர் தொழிலாளர் பேரவை மற்றும் பஞ்சு கிடங்கு பகுதி மகளிர் தோழர்கள் (ம) இளைஞர்கள் மற்றும் ‌தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பாக மாவட்ட செயலாளர் ரமணா, மாவட்ட துணை செயலாளர் ஜான் பாட்ஷா ஆகியோர் இந்த வீரவணக்க நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Advertisement