நாய் குரைத்ததால் வாய்த்தகராறு - பட்டப்பகலில் வெட்டி கொலை - திருச்சியில் பயங்கரம்!

நாய் குரைத்ததால் வாய்த்தகராறு -  பட்டப்பகலில் வெட்டி கொலை - திருச்சியில் பயங்கரம்!

திருச்சி திருவானைக்காவல் பகுதியில் மணல்மேடு பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் பட்டப்பகலில் வீட்டு வாசலில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

திருச்சி திருவானைக்கோவில் மணல்மேடு பகுதியில் வசித்து வருபவர் முருகன் (50). இவருடைய மனைவி புஷ்பவள்ளி. முருகன் ஆட்டோ டிரைவராக இருந்து வருகிறார்.

அதே பகுதியில் பரமேஸ்வரி என்பவரின் கறிக்கடையில் முருகன் கடந்து செல்லும் போது கடந்த 2 நாட்களுக்கு முன்பாக நாய் குரைத்ததாக சண்டை வந்துள்ளது. இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருக்கிறார் முருகன்.

Advertisement

இந்நிலையில் இன்று வீட்டில் முருகன் இருப்பதை தெரிந்த பரமேஸ்வரி, இரண்டு மகன்களும் சென்று முருகனை கழுத்தை அறுத்து வெட்டி கொலை செய்துள்ளனர். முருகனின் மனைவி புஷ்பவள்ளிக்கும் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஸ்ரீரங்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சியில் பட்டப்பகலில் கழுத்தை அறுத்து வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவானைக்காவல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.