கொரோனா காலகட்டத்திலும் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் சரக்கு ஏற்றுமதி

கொரோனா காலகட்டத்திலும் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் சரக்கு ஏற்றுமதி

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பினும் சரக்கு ஏற்றுமதியை கொரோனா இரண்டாவது அலை எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவலை தடுக்கும் விதமாக அரசு ஊரடங்கு அறிவித்தது. 

இதன் காரணமாக பொதுமக்கள் தங்களுடைய பயணங்களை ரத்து செய்தனர். இதனால் பல விமான நிறுவனங்களும் தங்களுடைய விமானங்களை ரத்து செய்தனர். ரயில்வே துறையும் இதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொண்டனர் மே மற்றும் ஜூன் மாதங்களில் தெற்கு ரயில்வே பல ரயில்களை ரத்து செய்தது. 

மே மாதத்தில் பல விமானங்களில் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே பயணிகள் பயணித்தனர். ஏப்ரல் மாதத்தில் 35,796 ஆக இருந்த பயணிகளின் எண்ணிக்கை மே மாதத்தில் 15,027 என்ற எண்ணிக்கை அளவிற்கு பாதியாக  குறைந்தது. தற்போது அரசு பல தளர்வுகளை  அறிவித்துள்ளதால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மூன்றாவது அலை  ஊரடங்கு இல்லாமல் இருப்பின் இந்த எண்ணிக்கையானது கணிசமாக உயரும். 

ஜூன் மாத பயணிகளின் எண்ணிக்கை 17, 626 என்று அதிகரித்துள்ளது என விமானநிலைய ஊழியர் தெரிவித்துள்ளனர். விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் சரக்கு ஏற்றுமதியானது எவ்வித பாதிப்பையும் எதிர்கொள்ளவில்லை. இந்த இரண்டாவது அறையில் மே மாதத்தில் 250 டன் காய்கறி ஏற்றுமதி வெளிநாடுகளுக்கு செய்யப்பட்டது.

ஏப்ரல் மாதத்தில் 325 டன் என்ற கணக்கில் இருந்தது சற்று மே மாதத்தில் குறைந்தாலும், ஜூன் மாதங்களில் மீண்டும் 350 டன் என்ற கணக்கில் உயர்ந்துள்ளது. சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கொரோனா தொற்று குறைந்து அரசு மேலும் பல தளர்வுகளை அறிவிக்கும் நிலையில் பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0