திருச்சி மாநகர காவல்துறை சார்பில் 200க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்!!

திருச்சி மாநகர காவல்துறை சார்பில்  200க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்!!

Advertisement

திருச்சி மாநகரில் 32வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாத விழாவை முன்னிட்டு, 19வது நிகழ்ச்சியாக இன்று(05.02.2021) திருச்சிராப்பள்ளி மாநகர காவல் மற்றும் FRONT LINE மருத்துவமனையும், வாசன் கண் மருத்துவமனையும் இணைந்து நடத்திய வாகன‌ ஓட்டுநர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் திருச்சி - சென்னை புறவழிச்சாலை சஞ்சீவி நகர் ABT மாருதி வணிக வளாகத்தில் நடைபெற்றது. 

Advertisement

இந்த மருத்துவ முகாமை திருச்சிராப்பள்ளி மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ. லோகநாதன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள். மருத்துவ முகாமில் 200க்கும் மேற்பட்ட அரசு பேருந்து போக்குவரத்து கழகத்தை சார்ந்த வாகன ஓட்டுநர்கள், கனரக வாகன ஓட்டுநர்கள், சாலை பயனாளர்கள் மற்றும் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் ஆகியோருக்கு மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டது. 

மேற்படி மருத்துவ முகாமில் திருச்சி மாநகரம் குற்றம் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையர் R.வேதரத்தினம் FRONT LINE மருத்துவமனை நிர்வாக இயக்குநர் மற்றும் மருத்துவர்கள், வாசன் கண் மருத்துவமனை மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், ABT மாருதி, சஞ்சீவி நகர் பொது மேலாளர், திருச்சி மாநகர காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள். மருத்துவ முகாமில் பங்கு பெற்று பரிசோதனை செய்து கொண்ட வாகன ஓட்டுநர்கள் இந்த மருத்துவ முகாம் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்தனர். இம்மருத்துவ முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் திருச்சி மாநகர காவல் ஆணையர் நன்றியை தெரிவித்துக் கொள்கிறார்.