திருச்சியில் தக்காளி இறக்கும் கூலி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்- தக்காளி விலை சில்லறையில் ரூ.100 க்கு விற்பனை

திருச்சியில் தக்காளி இறக்கும் கூலி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்- தக்காளி விலை சில்லறையில் ரூ.100 க்கு விற்பனை

திருச்சி காந்தி மார்க்கெட்டில் தக்காளி இறக்கும் கூலி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தங்களுக்கு ஏற்கனவே ஒன்பது ரூபாய் 75 காசு ஒரு பெட்டிக்கு கூலியாக கொடுக்கிறார்கள். தற்பொழுது 11 வரை வேண்டும் என கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. ஆனால் தக்காளி கமிஷன் வண்டி வைத்திருப்பவர்கள் மூன்று வருடம் ஒப்பந்தம் போட்டுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

பிரச்சனை தொடர்கிறது மேலும் கூலித் தொழிலாளர்கள் வேலையின் போது ஒழுங்கினமாக செயல்படுவதாக கமிஷன் வண்டியை உள்ளவர்களும் வியாபாரிகளும் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர்.

இந்தநிலையில் தற்போது திருச்சியில் தக்காளி விலை சில்லறையில் 80 ரூபாய் ஒரு கிலோ விற்பனையாகிறது. மொத்த வியாபாரம் என்பது இன்று இல்லை இன்று இரவு தக்காளி இறங்காது ஆகவே 100 ரூபாயை தொடும் என வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO