அப்போது கேட்கவில்லை... இப்போது கேட்கிறீர்கள் ! கேளுங்க கேளுங்க அண்ணன்கிட்டதானே கேட்குறீங்க !!

அப்போது கேட்கவில்லை... இப்போது கேட்கிறீர்கள் ! கேளுங்க கேளுங்க அண்ணன்கிட்டதானே கேட்குறீங்க !!

திருச்சி தில்லை நகரில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு நிருபர்களை எதிர்கொண்டார். அப்பொழுது திருச்சி மாநகரில் நடைபெற்று வரும், பாதாள சாக்கடை திட் டப்பணிகள் மற்றும் குடி நீர் குழாய்கள் புனரமைத்தல் பணிகளில் 20 சதவிகித பணிகள்தான் மீதம் உள்ளது. அந்த பணிகளும் விரைவில் நிறைவடையும். 7 ஆண்டுகளாக எந்தப்பணியும் நடைபெறாமல் இருந்தது. அப்போது யாரும், ஒன்றும் கேட்கவில்லை, இப்போது கேட்கிறீர்கள்.

திருச்சி குடமுருட்டியில் இருந்து பஞ்சப்பூர் வரை கோரையாற்றின் கரையில் 40 அடி அகலத்தில், சிமென்ட் சாலை அமைப்பதற்கு ரூபாய் 330 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அனைத்து கரையும் பலப்படுத்துவதற்கான பணிகளும், மாநக ரத்தை இரண்டாக பிரித்து சாலை அமைக்கும் பணி கள் நடைபெறுகிறது.

அதனால், மழைக்காலத்தில் கரைகளில் எந்தப் பாதிப்பும் வராது. பொதுப்பணித்துறை சார்பில், அனைத்து பகுதி களிலும் தூர்வாரப்பட்டுள்ளது. எனவே, மழைக்காலத்தில் எந்தவிதமான பிரச்னைகளும் இல்லாமல் பாதுகாக்கப்படும். இவ்வாறு அமைச்சர் நேரு கூறினார். எப்பொழுது சிரித்த முகத்துடன் காணப்படும் நேரு ஏனோ நேற்று சிடு சிடுவென எரிந்து விழுந்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision