திருச்சி மாநகராட்சியில் திமுக மேயர் ரேசில் இருந்த வேட்பாளர் திடீர் விலகல் -அதிருப்தி

திருச்சி மாநகராட்சியில் திமுக மேயர் ரேசில் இருந்த வேட்பாளர் திடீர் விலகல் -அதிருப்தி

 திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் வேட்பாளர்கள் வேட்புமனுவை மிகவும் விறுவிறுப்பாக தாக்கல் செய்து வருகின்றனர். திமுக திருச்சி மாநகராட்சியில் 51 இடங்களில் போட்டியிடுகிறது என அறிவித்து வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டது. இந்நிலையில் திமுகவில் மேயர், துணை மேயர் என பலரின் பெயர் பட்டியல் நீண்டு கொண்டே சென்றது.

முக்கியமாக இரண்டு அமைச்சர்கள் உடன் இருப்பவர்களில் திமுகவின் முன்னாள் துணை மேயர் அன்பழகன் மேயர் வேட்பாளர் ஆகவும் இதேபோல் திருவெறும்பூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரனும் பேசப்பட்டார்.வெற்றி பெற்று வந்தவுடன் மேயர் துணை மேயர் தேர்தலில் தேர்வில்  அனல் பறக்கும் விவாதங்கள் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது .

 40வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட வேட்பாளராக அறிவிக்கப்பட்ட  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன் விலகிவிட்டார் .இவருக்கு பதிலாக இவரது மகன் சிவா போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவரிடம் கேட்டபொழுது திமுக தலைமை கழகம் தன்னை விலகிக்கொள்ள அறிவித்ததால் விலகிக் கொண்டேன் என்று அதிருப்தியுடன் குறிப்பிட்டார்.தற்போது மேயர் ரேசில் முன்னாள் துணை மேயர் அன்பழகன் மற்றும் மதிவாணன் உள்ளனர்.

துணை மேயர்கள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது .திமுக கூட்டணி பேச்சுவார்த்தை முதல் துவங்கிய  பரபரப்பு இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் இன்னும் பரபரப்பு குறையவில்லை. காங்கிரஸ் இன்று 5 வார்டுகளில் வேட்பாளர்களை மனு தாக்கல் செய்து களமிறக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த முறை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் திருச்சி மாநகராட்சி நிமிடத்துக்கு நிமிடம் சஸ்பென்ஸ் தான் என்பது இதுவே சான்று.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn