போக்குவரத்து நெரிசல் - வியாபாரிகள் போராட்டம் - புதிய மீன் மார்க்கெட் விவகாரம்!

போக்குவரத்து நெரிசல் - வியாபாரிகள் போராட்டம் - புதிய மீன் மார்க்கெட் விவகாரம்!

திருச்சி புத்தூர் அருகே இயங்கி வந்த மீன் மார்க்கெட் அருகாமையில் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் உள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணமே இருந்தன. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி கோ-அபிஷேகத்திற்கு உட்பட்டஉறையூர் 60வது வார்டு குழுமணி பிரதான சாலையில் லிங்கா நகர் காசி விளங்கி பகுதியில் 3.32 கோடியில் புதிய மீன் மார்க்கெட் வணிக வளாகம் அமைக்கப்பட்டது.

Advertisement


இந்நிலையில் இந்த புதிய வணிக வளாகம் இன்றைய தினம் உறையூர் பகுதியில் திறக்கப்பட்டது. பழைய புத்தூர் மார்க்கெட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய வணிக வளாகம் அந்த இடத்தில் கட்டப்படவுள்ளது.


இந்த புதிய மார்க்கெட்டில் 40 மீன் மற்றும் இறைச்சி கடைகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என ஆரம்ப காலத்திலிருந்தே மாநகராட்சியிடம் பலமுறை மனு கொடுத்து வந்துள்ளனர். பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் இன்றுவரை இடம் ஒதுக்கீடு செய்யவில்லை என்றும் புதிதாக வந்தவர்களுக்கு ஏனைய சில்லரை வியாபாரிகளுக்கும் மீன் சந்தையில் இடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் புத்தூர் மீன் சந்தையில் வியாபாரம் செய்து வரும் மீன் மற்றும் இறைச்சி கடை உரிமையாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மாநகராட்சி நிர்வாகம் மறுத்து விட்டதாக கூறி தற்கொலைக்கு தூண்டுவதாகவும், மண்ணெண்ணெய் பாட்டிலுடன் தீக்குளிக்க முயற்சி செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் இதனை தடுத்து அவரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கூட தங்களை சந்திக்க வில்லை என குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் புதிய மார்க்கெட் உறையூர் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டதால் இன்று அதிகாலை 4 மணி முதல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக குழுமணி, கோப்பு, ஜீயபுரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் நெரிசலில் சிக்கியது . இதற்கு காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.