திருச்சியில் ரவுடிகள் வீடுகளில் திடீர் சோதனை - தயார் நிலையில் அதிரடிப்படை
திருச்சி மாநகரில் ஏற்கனவே குற்ற செயல்களில் ஈடுபட்டு கைதானவர்கள், குற்ற செயல் பட்டியலில், நடவக்கைகளில் சம்பந்தப்பட்டவர்கள்(ரவுடிகள்) வீடுகளில் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவின் பெயரில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
மிக முக்கியமாக ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் ஏதும் அவர்களிடம் உள்ளதா என்பது குறித்து மாநகர் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் உள்ள ஆய்வாளர்கள் தலைமையில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.
14 காவல் நிலையங்களிலும் 100க்கும் மேற்பட்ட போலீசார் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ரௌடிகள் ஏதும் காவல்துறையினரிடம் தகராறு ஈடுபட்டால் உடனடியாக விரைந்து செல்ல அதிரடி படையினர் மாநகர காவல் ஆணையர், துணை ஆணையர்கள் தலைமையில் தயார் நிலையில் உள்ளனர். மாநகர காவல் ஆணையரின் அதிரடி சோதனை ரவுடிகள் மத்தியில் கிலியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் திருச்சி மாநகரம் 14 காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசித்துவரும் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட "A+ மற்றும் A என வகைப்படுத்தப்ப்ட்ட சரித்திர பதிவேடு ரவுடிகளின்" வீடுகளை, சம்மந்தப்பட்ட காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் தலைமையில் இன்று (31.10.23)-ஆம் தேதி காலை 06:00 மணி முதல் மாலை 06:00 மணி வரை "அதிரடி சோதனை” நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில்,
சம்மந்தப்பட்ட ரவுடிகளின் வீடுகளில் அவர்கள் ஆஜரில் உள்ளார்களா? ஆயுதங்கள் ஏதும் உள்ளனவா? அவர்களது தற்போதைய செயல்பாடு என்ன? அவர்களுடன் சந்தேகத்திற்குரிய வேறு நபர்கள் எவரேனும் தங்கியுள்ளனரா? போன்ற விவரங்களை சேகரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அவ்வாறு அவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது தெரியவரும் பட்சத்தில் அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision