கொரோனா காலத்தில் மக்களுக்கு தொடர்ந்து உதவி வரும் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை

கொரோனா காலத்தில் மக்களுக்கு தொடர்ந்து உதவி வரும் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை

கொரோனா தொற்று அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில் துப்பாக்கி தொழிற்சாலை சார்பாக பல்வேறு நல உதவி செய்து வருகின்றனர். தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் வழங்கும் நிதி மற்றும் துப்பாக்கி தொழிற்சாலை ஜாயின்ட் ஆக்சன் கமிட்டியும் பொதுமக்களுக்கு சமூக அக்கறையோடு உதவி வருகின்றனர். 

கடந்த ஆண்டு முதல் பல்வேறு நல உதவிகளையும், சமூக அக்கறை கொண்ட செயல்களிலும், துப்பாக்கி தொழிற்சாலை ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து துப்பாக்கி தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரி கர்னல்.கே கார்த்திகேஷ் கூறுகையில்... சமூக அக்கறையோடு துப்பாக்கி தொழிற்சாலை பல சமுதாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களுக்கு சரியான முறையில் அவர்களுடைய பாதுகாப்பையும் முன்னிலைப்படுத்தி பல உதவிகளையும் நலத்திட்டங்களையும் துப்பாக்கி தொழிற்சாலை சார்பில் செய்து வருகின்றோம்.


துப்பாக்கி தொழிற்சாலை சார்பில் 
துவாக்குடி முதல் பால்பண்ணை
வரை உள்ள 12 கிராமங்கள் மற்றும் 3 காலனிகளில் கிருமி நாசினி தெளிக்கும்பணி நடைபெற்றது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில் பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு துப்பாக்கி தொழிற்சாலை மற்றும் கனரக உலோக ஊடுருவி ஆகிய இரண்டு தொழிற்சாலைகளும் இணைந்து தயாரித்து 3D நவீனத்துவ முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதே போன்று துப்பாக்கி தொழிற்சாலையில் 130 லிட்டர் கிருமி நாசினி தயாரித்து காவல்துறைக்கு வழங்கப்பட்டது. 

திருச்சி அரசு மருத்துவமனைக்கு தேவையான 50 கட்டில்கள், 50 குளுக்கோஸ் Iv ஸ்டாண்ட், 20  மருந்து வைக்கும் சிறிய பீரோக்கள், கொரானா வார்டில் உள்ளவர்களுக்கு உணவு தயாரிக்க தேவையான மளிகை சாமான்கள் உள்ளிட்ட 30 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கியுள்ளோம். நோயாளிகளின் பயன்பாட்டிற்காக 20 சக்கர நாற்காலி வழங்கியுள்ளோம். 

அதுமட்டுமின்றி துவாக்குடி அரசு மருத்துவமனை மற்றும் நவல்பட்டு ஆரம்ப சுகாதார நிலையங்கள் 30 கட்டில்கள், 30 Iv ஸ்டாண்ட் மற்றும் 21 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள  மளிகை பொருட்கள் நவல்பட்டு, பூலாங்குடி பகுதி மக்களுக்கும் வழங்கியுள்ளோம். அரசு மருத்துவமனை
தூய்மை பணியாளர்களுக்காக 8 ட்ராலி வழங்கியுள்ளோம் .

OFT இன் ps 6 இருப்பிடத்தின் பணி மேலாளர் ஸ்ரீ நகுல் சைனி தலைமையிலான திறமையான குழுவின் கீழ் 2 வார காலத்திற்குள் மருத்துவ உபகரணங்கள் சர்வீஸ் செய்யப்பட்டன. அனைத்து பழுது பார்க்கும் பொருட்களும் OFT ஊழியர்களின் தன்னார்வ பங்களிப்புகளிலிருந்து வாங்கப்பட்டன. 10 மருத்துவ கட்டில்கள், 20 ஸ்ட்ரெச்சர்கள், 15 சக்கர நாற்காலிகள் மற்றும் 5 உணவு தள்ளுவண்டிகள் சர்வீஸ் நிலையில் திருப்பி அனுப்பப்பட்டன. பணிக்குழு உறுப்பினர்கள் ஸ்ரீ ஜகாரியாஸ், சீனிவாசாலு, JWM பாலாஜி, JWM விஜிகுமார் மற்றும் ரமேஷ் ஆகியோர் பொது மேலாளர் ஆகியோர்களின் முயற்சி மற்றும் ஒத்துழைப்பும் காரணமாகும்.


தொடர்ந்து இரண்டாவது அலையிலும் மக்களுக்கு பயன்படும் வகையில் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவக்கல்லூரி கல்லூரி முதல்வர் மருத்துவர் வனிதாவை நேரில் சந்தித்து  2 லட்சம் மதிப்பில் 20 ஸ்ட்ரெச்சர்கள் (தூக்குப்படுக்கை) வழங்கியுள்ளோம். இத்துடன் நில்லாமல் மக்களுக்கான சேவை பணியில் OFT மற்றும் அதன் ஊழியர்கள்  சமூகத்திற்கு தொடர்ந்து சேவை செய்வார்கள் என்றும் கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC