"நீ வருவாய் என" - திருச்சி ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மனநலம் மற்றும் சாலை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

"நீ வருவாய் என" - திருச்சி ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மனநலம் மற்றும் சாலை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

"நீ வருவாய் என" ஒவ்வொரு ஓட்டுநர்களின் குடும்பங்களும் ஒவ்வொரு நாளும் காத்திருக்கின்றனர். அப்படி காத்திருக்கும் குடும்பங்களுக்கு மது அருந்தாமல் வீடு சென்றாலே மகிழ்ச்சியில் ஆழ்ந்திருப்பார்கள் குடும்பத்தினர். இது குறித்த ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி தான் இன்று திருச்சியில் நடைபெற்றது. 

Advertisement

அக்னி சிறகுகள் தொண்டு நிறுவனம், ஆத்மா மனநல மருத்துவமனை மற்றும் திருச்சி மாநகர காவல் துறையினர் இணைந்து திருச்சியில் உள்ள ஆட்டோ டிரைவர்களுக்காக மனநலம், குடிப்பழக்கம் மற்றும் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி பால்பண்ணை பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

அக்னி சிறகுகள் தொண்டு நிறுவன நிறுவனர் டாக்டர் மகேந்திரன் வரவேற்றார். திருச்சிராப்பள்ளி தெற்கு மண்டல போக்குவரத்து ஒழுங்கு பிரிவு உதவி ஆணையர் முருகேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில்... "2020 குறைந்த விபத்துக்கள் நடந்த நகரங்களில் திருச்சியும் ஒன்றாகும். அதே போலவே இந்த ஆண்டும் விபத்துக்களை தடுப்பதற்கும், வருகிற ஆண்டு அனைவரும் தலைக்கவசம் கட்டாயமாக்கப்படும். சாலை விதிகளை மீறி வாகனம் ஓட்டுதல், சரக்கு வாகனங்களில் அதிக பாரம் ஏற்றுதல், சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றுதல், அதிவேக பயணம், மது மற்றும் போதை பொருட்கள் உட்கொண்டு வாகனம் ஓட்டுதல், அலைபேசியில் பேசியபடி வாகனம் ஓட்டுதல் சாலை விதி மீறல்கள் ஆகும்.

வாகனம் ஓட்டுபவர்கள் தலைக்கவசம் அணிய வேண்டும் கார் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் நகருக்குள் குறிப்பிட்ட வேகத்துடன் செல்ல வேண்டும் சாலை வகுத்துள்ள விதிப்படி சாலைகளில் வாகனத்தை இயக்க வேண்டும்.

விபத்துகளை தவிர்க்க சாலை விதிகளை அனைவரும் கடை பிடிப்போம். மாணவ சமுதாயத்தை சேர்ந்த நாமும் சாலை விதிமுறைகளை மற்றவர்களுக்கு எடுத்து கூறுவோம். இதுதொடர்பாக நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கு பெறுவோம்" என்றார்.

ஆத்மா மனநல மருத்துவமனை குடி போதை மீட்பு மைய மருத்துவர் ராஜாராம், மனநல ஆலோசகர்கள் கரண் லூயிஸ், பிரகதீஸ்வரன் உள்ளிட்டோர் குடிபோதையில் இருந்து விடுபட ஆலோசனைகள் வழங்கினார்கள். மன நல விழிப்புணர்வு குறித்து விளக்கினார்கள்.

ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் கலீல், தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் சேவை சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சேகரன், ரஜினி மக்கள் மன்ற இளைஞர் அணி தமிம், தகவல் தொழில் நுட்ப அணி பழனிவேல், கண்மலை அறக்கட்டளை எடிசன் இளங்கனல், டிரஸ்ட் அந்தோணி ஜெய்கர், மாற்றம் அறக்கட்டளை தாமஸ், நோ ஃபுட் வேஸ்ட் திருச்சி மோகன், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், லட்சுமிபுரம் ஆட்டோ ஸ்டாண்ட் தலைவர் சேகர், செயலர் தஸ்தகீர், பொருளாளர் சர்தார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

Advertisement

இந்நிகழ்வில் சாலை விதிகள் குறித்து துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டு பறை இசை பாடல் பாடப்பட்டது‌. மேலும் சாலை பாதுகாப்பு பற்றிய உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். நிறைவாக தெற்கு சித்தாம்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் விமலா நன்றி கூறினார்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a