திருச்சியில் 36 மையங்களில் குரூப்-1 தேர்வு - ஆட்சியர் ஆய்வு!!

திருச்சியில் 36 மையங்களில் குரூப்-1 தேர்வு - ஆட்சியர் ஆய்வு!!

தமிழகத்தில் காலியாக உள்ள 66 பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு மாநிலம் முழுவதும் இன்று நடைபெறுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் 5ல் நடக்கவிருந்த குரூப்-1 முதல்நிலை தேர்வு கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. கோட்டாட்சியர், வணிகவரி உதவி ஆணையர், தீயணைப்பு அலுவலர் போன்ற பதவிகளுக்கான தேர்வு இன்று நடக்கிறது. 

Advertisement

தேர்வர்கள் 9.15 மணிக்கே தேர்வு மையத்திற்கு வரவும், கருப்பு நிற பேனா மட்டுமே பயன்படுத்தவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக தேர்வு அறைக்குள் நுழைந்தவுடன் தேர்வர்கள் தங்கள் கைரேகையை கட்டாயம் பதிவு செய்ய வேண்டுமென டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

விடைத்தாளில் தெரியாத கேள்விகளுக்கு E கட்டத்தை shade செய்ய வேண்டும் என்ற புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று நடக்கும் குரூப் 1 தேர்வில் மாநிலம் முழுவதும் சுமார் 2 லட்சம் பேர் கலந்து கொள்கிறார்கள். குரூப்-1 முதல்நிலை தேர்வில் வெற்றி பெறுபவர்கள் 3 தாள்கள் உள்ளடக்கிய மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

திருச்சி மாவட்டத்தில் குரூப்-1 தேர்வு 36 மையங்களில் 10 ஆயிரத்து 765 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

குரூப்-1 தேர்வுக்கு 36 முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.தேர்வை கண்காணிக்க துணை கலெக்டர் தலைமையில் 4 பறக்கும்படை நியமனம் செய்யப்பட்டுள்ளது.ஒரு தேர்வு மையங்களில் ஒரு கண்காணிப்பாளர் வீதம் 36 தேர்வு மையங்களில் 36 தேர்வு கண்காணிப்பாளர்கள் மற்றும் வீடியோ கிராபர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்புப் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது. உள்ளே வரும் தேர்வர்களுக்கு முன்னதாக கிருமி நாசினி மற்றும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. தேர்வர்கள் செல்போன் உள்ளிட்ட எவ்வித மின்னணு சாதனங்கள் எடுத்து வர அனுமதிக்கப்படவில்லை.

Advertisement

தேர்வு மையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு திருச்சி ஆர்சி பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.