திருச்சி மளிகை கடையில் தீ விபத்து - பொருட்கள் எரிந்து நாசம்!

திருச்சி மளிகை கடையில் தீ விபத்து - பொருட்கள் எரிந்து நாசம்!

திருச்சி மளிகை கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் எரிந்து நாசமாகியது.

Advertisement

திருச்சி கே.கே நகர் மில் ஸ்டாப் எதிரே உள்ள இந்திரா மளிகை மற்றும் ஆயில் மில் கடையில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடையில் இருந்த மளிகை மற்றும் 20 மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியது.திருச்சி கே.கே.நகர் இந்திரா நகர் பிருந்தாவன் தெருவைச் சேர்ந்தவர்  சேவியர் ராஜா(51. இவர் அதே பகுதியில் இந்திரா மளிகை மற்றும் ஆய்வு மில் என்ற பெயரில் மளிகை பொருட்கள் மற்றும் எண்ணெய் பொருட்கள் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 3 மணி அளவில் மின்கசிவு ஏற்பட்டு கடையில் தீ விபத்து ஏற்பட்டது. 

இதனை அப்பகுதியில் சென்ற ஒருவர் பார்த்து உடனடியாக ராஜாவிற்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ராஜா காவல்துறை மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இதில் உயிர் சேதம் ஏதும் இன்றி 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள், மின் சாதனங்கள் எரிந்து நாசமாயின. இதுகுறித்து கேகே நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 மளிகை கடையில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement