காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் மீன்குஞ்சுகளை விட்ட அமைச்சர்
தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் மத்திய அரசின் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் நிதியுதவியுடன், பிரதான் மந்திரி மட்சய சம்படா யோஜனா திட்டம் 2021-22 இன் கீழ் ஆறுகளில் நாட்டு இன நன்னீர் மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் (River Ranching Programme Under PMMSY) திட்டத்தின் கீழ் காவேரி ஆற்றில் 0.58 லட்சம் மற்றும் கொள்ளிடம் ஆற்றில் 1.50 இலட்சம் ஆக மொத்தம் 2.08 லட்சம் நாட்டு இன மீன்குஞ்சுகள் முறையே காவேரி மற்றும் கொள்ளிடம் பகுதிகளில் இருப்பு செய்யப்பட்டது.
இத்திட்டமானது நாட்டின மீன் வகைகளான சேல் கெண்டை, கல்பாசு கெண்டை, இந்திய பெருங்கெண்டை மீன்களான கட்லா, ரோகு மற்றும் மிர்கால் ஆகியவற்றின் சினைமீன்கள் ஆறுகளிலிருந்து சேகரிக்கப்பட்டு சேலம் மாவட்டம் மேட்டூர் அணை அரசு மீன்குஞ்சு உற்பத்தி பண்ணைகளில் தூண்டுதல் முறையில் மீன்குஞ்சு உற்பத்தி செய்யப்பட்டு, அம்மீன் குஞ்சுகள் விரலிகளாக வளர்க்கப்பட்டு மொத்தம் 2.08 இலட்சம் மீன் விரலிகள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவேரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் இருப்பு செய்யப்பட்டது (River Ranching).
இத்திட்டமானது ஆறுகளில் உள்நாட்டு மீன்வளத்தினை பெருக்கிடவும், அழிந்து வரும் நாட்டின மீன் இனங்களை பாதுகாத்திடவும், ஆறுகளில் நிலைத்த வளம் குன்றா மீன்வளத்தை நிலைநிறுத்திடவும், (Sustainable stock maintenance of native fish species inriver), ஆற்று மீன்பிடிப்பினை நம்பியுள்ள உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடும் வகையில் இத்திட்டத்தினை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என ;.நேரு இன்று (06.01.2023) தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வுகளில், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தர பாண்டியன், செ.ஸ்டாலின் குமார், நா.தியாகராஜன், எம்.பழனியாண்டி, சீ.கதிரவன், மாவட்ட ஊராட்சி தலைவர் த.ராஜேந்திரன், ஒன்றியக் குழுத் தலைவர் துரைராஜ், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் (திருச்சி மண்டலம்) ஆர்.சர்மிளா, உதவி இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை (திருச்சி மற்றும் கரூர்) ப.ரம்யாலட்சுமி, அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn