புயல் எதிரொலி - வெறிச்சோடிய திருச்சி தேசிய நெடுஞ்சாலைகள்!

புயல் எதிரொலி - வெறிச்சோடிய திருச்சி  தேசிய நெடுஞ்சாலைகள்!

நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் காரைக்கால் அருகே இன்று இரவு புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. திருச்சியில் இருந்து செல்லும் விமானங்கள் மற்றும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அனைத்து அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்துள்ளார். மேலும் பேருந்துகள் குறைவாக இயங்குவதால் திருச்சியில் உள்ள முக்கிய சாலைகள் வெறிச்சோடி உள்ளது.

திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஆகியவை வெறிச்சோடியும் திருச்சி தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை திருச்சி கரூர் நெடுஞ்சாலை ஆகியவற்றில் போக்குவரத்து குறைந்து காணப்படுகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm