திருச்சி மேற்கு தொகுதி சட்டமன்ற தேர்தல் நிறுத்தப்படும் என்ற வதந்தியை நம்ப வேண்டாம் என மாவட்ட தேர்தல் அதிகாரி பேட்டி

திருச்சி மேற்கு தொகுதி சட்டமன்ற தேர்தல் நிறுத்தப்படும் என்ற வதந்தியை நம்ப வேண்டாம் என மாவட்ட தேர்தல் அதிகாரி பேட்டி

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர்களுடன் சின்னங்களை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.  மேற்கு வட்டாச்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியும் திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர் திருச்சி மாவட்டத்தில் முசிறி, மணப்பாறை உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் தலா 1 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணப்பட்டுவாடா புகார் இதையடுத்து மேற்கு தொகுதியில் தேர்தல் நிறுத்தப்படுமா பரிந்துரை செய்வீர்களா  என்ற கேள்விக்கு மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான திவ்யதர்ஷினி வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்.

வேறு ஏதும் தகவல் இருந்தால் முறைப்படி ஊடகத்திற்கும் பொதுமக்களுக்கும் அறிவிக்கப்படும் என்று பதிலளித்துள்ளார். மேலும் பணப்பட்டுவாடா தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க கூடுதல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

திருச்சி மேற்கு தொகுதி உட்பட்ட காவல் நிலையங்களில் பணப்பட்டுவாடா புகார் வந்ததையடுத்து தேர்தல் அதிகாரிகளும் காவல்துறையும் இணைந்து தான் இந்த அதிரடி சோதனை செய்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்பொழுது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW