ரெங்கா ரெங்கா கோஷத்துடன் ஸ்ரீரங்கம் கோயில் தேரோட்டம்...

ரெங்கா ரெங்கா கோஷத்துடன் ஸ்ரீரங்கம் கோயில் தேரோட்டம்...

108 திவ்ய திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

Advertisement

இத்திருவிழாவின் 9ம் நாளான நேற்று முன் தினம் நம்பெருமாள் ரெங்க நாச்சியாருடன் சேர்த்தி சேவை கண்டருளினார்.

Advertisement

இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இவ்விழாவையொட்டி நம்பெருமாள் அதிகாலை 5.45 மணிக்கு தாயார் சன்னதியில் இருந்து கோரதம் என்னும் பங்குனிதேர் மண்டபத்திற்கு புறப்பட்டார். 

காலை 7.30 மணிக்கு தேரில் எழுந்தருளினார். பின்னர் காலை 9 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அப்போது ஏராளமான பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என்ற கோஷத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர். இதனையடுத்து 4 வீதிகளிலும் தேர் பவனி வந்தது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவிஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள், கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்..

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW