அதிமுக வேட்பாளரின் ஜேசிபி ஓட்டுநர் வீட்டு வைக்கபோரில் 1 கோடி ரூபாய் பறிமுதல்
திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக உள்ளவர் ஆர்.சந்திரசேகர். இவர் தற்போது மூன்றாவது முறையாக இத்தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் நேற்று ( ஞாயிற்றுக்கிழமை ) இரவு வருமானவரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினார்கள். எம்எல்ஏ விடம் நீண்டகாலமாக ஜேசிபி ஓட்டுனராக பணிபுரியும் வலசுப்பட்டியைச் சேர்ந்த அழகர்சாமி (38) என்பவரது வீட்டில் நடந்தப்பட்ட சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கணக்கில் வராமல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு கோடி ரூபாய் பணத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். அனைத்தும் 500 ரூபாய் நோட்டுகளாக இருந்துள்ளன.
இதேபோல் வலசுபட்டியைச் சேர்ந்த தங்கபாண்டியன் (56), கோட்டைப்பட்டியைச் சேர்ந்த முருகானந்தம் என்ற ஆனந்த் (32). என்பவரது வீடுகளிலும் சோதனை நடந்துள்ளது. இங்கு எதுவும் சிக்கவில்லை என கூறப்படுகிறது.திருச்சி வருமான வரித்துறை இணைஇயக்குனர் மதன் குமார் தலைமையில் மூன்று கார்களில் வந்திருந்த அதிகாரிகள் மூன்று குழுக்களாக பிரிந்து மூன்று இடங்களிலும் தனித்தனியே சோதனை நடத்தியுள்ளனர்.
வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து ஐடி ரெய்டு நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சோதனை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் கூறாமல் அதிகாரிகள் புறப்பட்டு சென்றுவிட்டனர். வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு குறித்து தகவலறிந்த தேர்தல் பறக்கும்படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW