கொளுத்தும் வெயிலில் திருச்சி பேருந்து நிலைய சாலையில் நடுவில் நீரூற்று பாதசாரிகள் - வாகன ஓட்டிகள் கடும் அவதி

கொளுத்தும் வெயிலில் திருச்சி பேருந்து நிலைய சாலையில் நடுவில் நீரூற்று பாதசாரிகள் - வாகன ஓட்டிகள் கடும் அவதி

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். எப்பொழுதும் பரபரப்பாக காட்சியளிக்கும் பேருந்து நிலையத்தின் பகுதியில் மாவட்ட அதிகாரிகளும், மாநகராட்சி அலுவலர்களும் கடந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கலையரங்கம் திருமண மண்டபம் வழியாக செல்லக்கூடிய சாலையின் நடுவில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு நீர் செயற்கை நீரூற்று போல் சாலையில் ஆறாக ஓடுகிறது. நீர் வெளியேறும் பகுதி பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கி இருப்பதால் அவ்வழியாக செல்லும் பேருந்து அந்த பள்ளத்தில் இறங்கி செல்கிறது.

இதனால் அவ்வழியாக வரும் இருசக்கர வாகனம் மற்றும் பாதசாரிகள் மீது அந்த தண்ணீர் தெரிகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். ஏற்கனவே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு மாநகராட்சி ஊழியர்கள் சரி செய்தனர். ஆனால் முறையாக சரி செய்யாததால் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது.

கடந்த ஒரு வாரமாக குடிநீர் சாலையில் வழிந்தோடுகிறது. சாலை நடுவே ஒரு நீரூற்று போல காட்சியளிக்கிறது. இதனை உடனடியாக அரசு அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் கவனத்தில் எடுத்துக்கொண்டு  குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து அந்த பள்ளத்தை மூட வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO