திருச்சி எஸ் பி-க்கும் நாதகவினருக்கும் யுத்தம் - பதிவு பட்டியலிலுள்ள அனைவரையும் கைது செய்யாமல் விடமாட்டேன் - எஸ்.பி சூளுரை பதிவு

திருச்சி எஸ் பி-க்கும் நாதகவினருக்கும்  யுத்தம் - பதிவு பட்டியலிலுள்ள அனைவரையும் கைது செய்யாமல் விடமாட்டேன் - எஸ்.பி சூளுரை பதிவு

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் கொம்பன் என்ற ஜெகன் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். அப்போதிலிருந்து ஜெகனை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்த அவரது ஆதரவாளர்கள் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்தும், அவரைப் பற்றி அவதூறு கருத்துக்களை பதிவு செய்தும் வந்தனர்.

அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் தரப்பிலும எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பதிவிட்டதாக விருதுநகரை சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி கண்ணன் மற்றும் திருப்பதி ஆகியோர் மீது தில்லை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இது தவிர நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாநில பொதுச் செயலாளர் சாட்டை துரைமுருகன், இளைஞர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பவனம் கார்த்தி தூண்டுதலின் பேரில் இந்த நிகழ்வுகள் நடந்ததாக எஸ் பி வருண்குமார் அளித்த புகாரின்படி, திருச்சி தில்லைநகர் போலீசார் 22 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இருப்பினும், திருச்சி எஸ் பி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தாரை விமர்சனம் செய்து சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாகி வருகின்றன. இதனிடையே திருச்சி எஸ் பி வருண்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் இதை தூண்டி விட்ட நபர்களையும் நீதித்துறை முன் கொண்டு வந்து நிறுத்துவேன். 

வெளிநாடுகளில் இருந்து ஆபாசமாக பதிவு செய்யும் போலி ஐடி தரப்பையும் விடப்போவதில்லை சட்டத்தின் மேல் நீதித்துறையின் மேல் 100 சதவீதம் நம்பிக்கை வைக்கிறேன் ஆபாசத்திற்கும் அவதூருக்கும் இறுதி முடிவுரை எழுதுவோம் என பதிவிட்டுள்ளார். திருச்சி எஸ் பி ஐ அவரது குடும்பத்தாரையும் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து பதிவுகள் வெளியாவது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 30க்கும் மேற்பட்ட ஐடி கள் சைபர் கிரைம் போலீசாரின் கண்காணிப்பில் உள்ளது. அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலிஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

தற்போது திருச்சி மாவட்ட எஸ். பி ஒரு பதிவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். விரைவில் இவனும் @kuma90313394 இவனது முதலாளியும் இவர்கள் செய்த/செய்கின்ற குற்றத்திற்கு பிடிபடுவார்கள். பெயர் செல்வகாந்தன் என்றும் சென்னை அண்ணா நகரில் குடியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். போலி பாஸ்போர்ட் மூலம் கனடா சென்று அங்கு ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும், தடை செய்யப்பட்ட இயக்கம் மற்றும் பிரிவினைவாத இயக்கங்களுடன் தொடர்புடையவர் என குறிப்பிட்டுள்ளார். குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்யும் இந்த மனநோயாளி பற்றி விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருடைய பாஸ்போர்ட் எண் கனடாவில் பயன்படுத்தும் கைப்பேசி எண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை பதிவில் எஸ்பி குறிப்பிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து ஐபிஎஸ் ஆபிஸர் மீது ஆபாசமான, அவதூறான தகவல்களை பதிவிடுவது தொடர்கிறது. இது குறித்து நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எனக்கும் இந்த பதிவிற்கு எந்த சம்பந்தமும் இல்லை. பதிவு போடுபவர்களை கட்சியிலிருந்து நீக்கி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பதிவு போடுபவர்கள் லிஸ்ட்டை அனைவரையும் எஸ் பி எடுத்து ஒருவரையும் விட மாட்டேன் என தொடர்ந்து அவரும் பதிவிட்டு இந்த வார்த்தை யுத்தம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision