திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கூட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கூட்டம்

திருச்சிராப்பள்ளி  மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படைகள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 8 மணிநேர சுழற்சி அடிப்படையில் நாள் ஒன்றுக்கு மூன்று குழுக்கள் மாவட்ட தேர்தல் அலுவலரால்  நியமிக்கப்பட்டு பணி செய்து வருகின்றனர் .
பறக்கும் படை மேற்கொள்ள வேண்டிய பணிகள் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் மற்றும் புகார்களுக்கு நேரில் சென்று விசாரணை செய்து அதன் விவரங்களை அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்க்கு தெரிவிக்க வேண்டும்.


 புகாரின் மீது உண்மைதன்மை இருப்பின் அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரங்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.
  சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களை ஆயுதங்கள் மற்றும் வேறு விதமான அச்சுறுத்தல் போன்ற நிகழ்வுகள் ஈடுபடுதல் போன்ற புகார்கள் வந்தால்  சம்மந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு அதன் விவரங்களை தேர்தல் நடத்தும் அலுவலர்க்கு  அறிவிக்க வேண்டும்.


 பணம் மற்றும் மது பானங்கள் மற்றும் இதர பரிசுப்பொருட்கள் வாக்காளர்களுக்கு வழங்குதல் போன்ற புகாரில் நேரில் சென்று புகாரின் மீது உண்மை தன்மை இருப்பின் அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரங்களை தெரிவிக்க வேண்டும். வாகன சோதனையில்  உரிய ஆவணங்களின்றி பணம் தங்கம் விலை உயர்ந்த பொருட்களை எடுத்துச் சென்றால் அவற்றை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் தெரிவிக்க வேண்டும் .
தேர்தல் தேதி அறிவித்த பின்னர் பொது இடங்களில் கட்சி சம்பந்தமான கொடிகள், சுவரொட்டிகள், விளம்பரங்கள் ஏதும் இருப்பின் உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .


மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை தேர்தல் நடத்தும் அலுவலர் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவிக்க வேண்டும்.
  இந்திய தேர்தல் ஆணையத்தால்  நியமிக்கப்படும் தேர்தல் பொது பார்வையாளர்கள் மற்றும் செலவின பார்வையாளர்கள் மூலம் வரப்பெறும்  புகார் மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்.


 பறக்கும் படை குழுவினர் தங்களது பணி முடிவுற்ற பின்னர் தினசரி அறிக்கையை தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி தேர்தல் அலுவலரிடம் சமர்ப்பித்தல் வேண்டும் .
இதேபோன்று நிலையான கண்காணிப்பு குழுவில் உள்ளவர்கள் சோதனைச் சாவடிகள் மற்றும் முக்கியமான இடங்கள் மற்றும் சாலைகளில் வாகன சோதனைகளில்  ஈடுபடவேண்டும் வாகனங்களில் உரிய ஆவணங்கள் இன்றி பணம் மற்றும் விலைமதிப்புள்ள பொருட்களை எடுத்துச்செல்லும் நேர்வுகளில் விசாரணை செய்து அவற்றினை கைப்பற்றி  தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.


 மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்.
 இந்திய தேர்தல் ஆணையம் அமைக்கப்படும் தேர்தல் பொறுப்பாளர் நிலையான கண்காணிப்பு குழுவினர் தங்களது பணி முடிவுற்ற பின்னர் தினசரி அறிக்கை தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி   அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.


 பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழு  ஆகிய குழுக்கள் தினசரி அறிக்கைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்களுக்கு தினசரி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
 தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதற்கு சிறப்பு பணி செய்து முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


 இந்நிகழ்வில் மாநகர காவல் ஆணையர் முனைவர் லோகநாதன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்  ஜெயப்பிரித்தா பயிற்சி ஆட்சியர் சித்ராவிஜயன் அவர்கள் பறக்கும்படை ,வீடியோ கண்காணிப்பு குழு ,நிலையான கண்காணிப்பு குழுவை சேர்ந்தவர்களும்  கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW