அரசுப் பள்ளியில் குடிபோதையில் இருந்த ஆண் மற்றும் பெண் - போலீசாரால் கைது

அரசுப் பள்ளியில் குடிபோதையில் இருந்த ஆண் மற்றும் பெண் - போலீசாரால்  கைது

திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வாளாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று (5.04.2025)

காலை பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வகுப்பறையில் ஏதோ சத்தம் கேட்டுச்சென்று பார்த்தபோது அங்கு ஒரு ஆண் ஒரு பெண்ணும் இருந்துள்ளனர். அவர்களிடம் பள்ளி ஆசிரியர்கள் விசாரித்த போது அந்த ஆண் குடிபோதையின் காரணமாக நிதானமின்றி மிரட்டும் தோணியில் பேசி உள்ளார்.

அந்தப் பெண் கேட்டதற்கு தான்  மறவனூர் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தனது கணவர் வாளவாடியைச் சேர்ந்தவர் என்றும் தன்னை நேற்று சமயபுரம் கோவிலுக்கு அழைத்து வந்துவிட்டு இரவு வாளாடி செல்லும் வழி எனக்கூறி அழைத்து வந்தார். மேலும் வரும் வழியில் இருட்டான ஒரு கட்டிடத்தில் அழைத்துச்சென்று தங்க வைத்து அவர் மது அருந்தினார்.

இரவு நேரம் என்பதால் இடம் பள்ளி என்று தனக்குத் தெரியாது என்றும் தனது கணவர் குடிபோதையில் இருந்ததால் இங்கு அழைத்து வந்ததாகவும் காலை எழுந்ததும் அவர் குடிபோதையில் இருந்து தெளிவில்லாமல் இருந்ததால் அவரை இங்கிருந்து அழைத்துச் செல்ல இயலவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த நபரை பற்றி விசாரித்த பொழுது அவரது பெயர் நவீன் குமார் அங்குசாமி கீழே தெரு கீழவாளாடி லால்குடி திருச்சி மாவட்டம் என தெரியவந்தது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் இரு நபர்களை விசாரணைக்கு போலீசார் லால்குடி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

நவீன் குமாரிடம் விசாரித்த போது தான் மது போதையில் இருந்ததால் இடம் பள்ளி என்று தெரியாமல் தனது மனைவியை அழைத்து வந்து விட்டதாகவும் இனிவரும் காலங்களில் யாரும் இது போன்ற தவறை செய்ய வேண்டாம் என்று தனது தவறை ஒப்புக்கொண்டு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

இருப்பினும் பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் படி லால்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவலுக்கு அனுப்பப்பட்டு உள்ளார்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision