திருச்சி மாநகர காவல் ஆணையரகம் சார்பில் குறைகள் தீர்ப்பு முகாம்!

திருச்சி மாநகர காவல் ஆணையரகம் சார்பில் குறைகள் தீர்ப்பு முகாம்!

திருச்சி மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் பெறப்படும் புகார்கள்,இணைய வழியில் பெறப்படும் புகார்கள், வாட்ஸ்அப் மூலம் பெறப்படும் புகார்கள் அனைத்திற்கும் உடனடி தீர்வு காணும் வகையில் மனுதாரர்கள் மற்றும் எதிர் மனுதாரர்களை பொதுவான இடத்திற்கு வரவழைத்து மனுக்கள் மீதான குறைகள் தீர்ப்பு முகாம் நடத்த திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன், உத்தரவிட்டதின் பேரில் திருச்சி மாநகர அனைத்து சரகங்களிலும் மனுக்கள் மீதான குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது. 

Advertisement

இந்நிலையில் கண்டோன்மெண்ட் காவல் நிலைய சரகத்தில் சீனிவாச மஹாலிலும், பொன்மலை சரகத்தில் SIT வளாகத்திலும், கோட்டை சரகத்தில் சுமங்கலி மஹாலிலும் மற்றும் ஸ்ரீரங்கம் சரகத்தில் திருவானைக் கோவில் ஏ.ஆர் கல்யாண மண்டபத்திலும் மனுக்கள் மீதான குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது. இதில் காவல் துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு), காவல் துணை ஆணையர் (குற்றம் மற்றும் போக்குவரத்து), உதவி ஆணையர், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மனுதாரர்களையும், எதிர் மனுதாரர்களையும் நேரடியாக வரவழைக்கப்பட்டு 163 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டது. இதில் 154 மனுதாரர்களும் , 152 எதிர் மனுதாரர்களும் ஆஜராகி இருந்தனர். இருதரப்பையும் விசாரணை செய்து மேற்படி 163 மனுக்களில் 127 மனுக்கள் மீதான முடிவு எட்டப்பட்டு மனுக்கள் முடித்து வைக்கப்பட்டது. 

 பொதுமக்களின் நலன் கருதி ஒரே நாளில் புகார் மனு மீது விசாரணை செய்யப்பட்டு ஒரே நாளில் முடிவுக்கு கொண்டு வருவது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இப்பணியை மேலும் சிறப்பாக செய்ய அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Advertisement