திருச்சி முக்கொம்பிற்க்கு வரும் 19 ஆயிரம் கன அடி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறப்பு

திருச்சி முக்கொம்பிற்க்கு வரும் 19 ஆயிரம் கன அடி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறப்பு

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட நீரானது மாயனூர் கதவணை கடந்து திருச்சி முக்கொம்பிற்க்கு வரும் நிலையில் காவிரி ,கொள்ளிடம் என இரண்டாகப் பிரிகிறது .இந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி
முக்கொம்பு மேலணையில்  10 ஆயிரம் கன அடி நீர்  கொள்ளிடம் பழைய கதவணையில்  திறந்து விடப்பட்டது. 

 புதிய கொள்ளிடம் கதவணை 2019 மார்ச்சில் ரூ 387 கோடியில் பணிகள் துவங்க அடிக்கல் நாட்டப்பட்டது. பணிகள் முடிக்க இருபத்தி நான்கு மாத காலம் .புதிய  கதவணை தற்பொழுது 92% மட்டும் பணிகள் முடிவடைந்துள்ளது.  

தற்போது மேட்டூர் அணையில் வரும் நீர் காவிரியில் திறக்கபடவில்லை. இந்த நிலையில் வெள்ளபெருக்கு ஏற்படாமல் தடுப்பதற்கு கொள்ளிடம் பழைய கதவணை இருந்து 32 மதகுகள் மூலம் தற்போது வரும் 19 ஆயிரம் கன அடி நீர் முழுவதும் திறந்து விடப்பட்டுள்ளது . புதிய கதவணையில் 45 மதகுகளும் முழுவதுமாக திறந்து வைக்கபட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் சென்னை நேப்பியர் பாலம் போல் நம்பர் 1 டோல்கேட் திருவானைக்காவல் சோதனை சாவடி பகுதியில் கட்டபட்டுள்ள பாலத்தை கடந்து கல்லணையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாலம் வழியாக கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் செல்லும் காட்சி பருந்து பார்வையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 8 ம் தேதி 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு படிப்படியாக உயர்ந்து மீண்டும் தற்போது 19 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே தற்போது கொள்ளிடம் ஆற்றில் சென்று கொண்டிருக்கிறது.

 வெள்ள அபாயம் தற்போது இல்லை எச்சரிக்கை மட்டுமே தற்போது விடப்பட்டுள்ளது.இக்காட்சிகளை பருந்து பார்வையில்  பதிவு செய்ததன் மூலம் தெரிகிறது.திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வரக்கூடிய 19 ஆயிரம் கன அடி நீர்  முழுவதும் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படுவதற்க்கு காரணம் டெல்டா மாவட்டங்களில் கனமழை வெள்ளம் மேலும் சிறு வாய்க்கால்கள் காட்டாறுகளில் ஓடிவரும் மழை நீர் காவிரியில் வந்து கலக்கிறது. இதுவரை  முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn