5 முறை பெட்டியில் போட்ட மனு - காத்திருக்கும் மாற்றுத்திறனாளி மாணவன்!!

5 முறை பெட்டியில் போட்ட மனு -  காத்திருக்கும் மாற்றுத்திறனாளி மாணவன்!!

5 முறை மனு அளித்தும் தீர்வு கிடைக்காதால் 6வது முறையாக மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி மாணவன் திருச்சி ஆட்சியர் அலுவலகம் வந்தது அனைவரையும் கண்கலங்க செய்தது. 

Advertisement

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே ஏலமனம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சடையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் சுப்பிரமணியன் - இளவரசி தம்பதியர் ‌ விவசாய தொழில் செய்துவரும் சுப்பிரமணியனுக்கு லோகேஸ்வரன் (17) கேசவமூர்த்தி (14) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். 

இதில் இடது கால் மாற்றுத்திறனாளியான லோகேஸ்வரன் அக்கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து முடித்து தற்போது பதினோராம் வகுப்பு படிப்பதற்கு சடையம்பட்டியில் இருந்து மணப்பாறை அல்லது வையம்பட்டி பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலையுள்ளது. மேல்படிப்பு படிக்க செல்லும் தனது மகனுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மூன்று சக்கரம் பொருத்திய இருசக்கர வாகனத்தை வழங்கக்கோரி மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் விண்ணப்பித்தும் இதுவரை கிடைக்கவில்லை. 

Advertisement

இதையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் மாற்றுத்திறனாளிக்கான நல உதவிகள் பெறுவதற்கும் 5 முறை விண்ணப்பித்தும் மனு அளித்துள்ளனர். தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாததால் அவர் தாயார் 6-வது முறையாக தனது மாற்றுத்திறனாளி மகனுடன் மனு அளித்துள்ளனர். 

மாற்றுத்திறனாளி மகனுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த தாயார் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்தபோது மனு பெட்டியில் போட்டு செல்லுமாறு அதிகாரிகள் தெரிவித்ததால் மாற்றுத்திறனாளி மகனை அழைத்துக் கொண்டு ஏமாற்றத்துடன் திரும்பினார். அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த மாற்றுத்திறனாளி மாணவனை பார்த்த அனைத்து கண்களின் நோக்கமாக இருந்தது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a