திருச்சியில் பொங்கல் பரிசு வினியோகம் - அமைச்சர்கள் தொடங்கி வைப்பு!

திருச்சியில் பொங்கல் பரிசு வினியோகம் - அமைச்சர்கள் தொடங்கி வைப்பு!

திருச்சி மாவட்டத்தில் 1224 நியாயவிலைக் கடைகளில் உள்ள 8,14,833 குடும்ப அட்டைகளில், 7,95,000 அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை ரூ 2,500 பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று திருச்சி பாலக்கரை பகுதியில் ஆட்சியர் சிவராசு, சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

Advertisement

கடந்த 26ம் தேதி முதல் 1000 முதல் 1200 நபர்களுக்கான டோக்கன்களை வினியோகிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று ஜனவரி 4ம் தேதியிலிருந்து 12ம் தேதி வரை வழங்கப்படும். பொருட்கள் வாங்காமல் விடுபட்டவர்கள் 13ஆம் தேதி பொங்கல் பரிசுத் தொகையுடன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். 

திருச்சி மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 199 கோடி ரூபாய் பொங்கல் பரிசுத்தொகையாக ரொக்கமாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திருச்சி மாவட்டத்தில் சர்க்கரை காடுகள் 24 ஆயிரம் பேர் வைத்திருந்தனர். அதில் 9,000 பேர் தற்பொழுது அரிசி அட்டைதாரர்களாக மாறி உள்ளனர் என மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a