உணவகங்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்

உணவகங்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை திருச்சி மாவட்டத்தில் ஹோட்டல் மற்றும் உணவக விற்பனையாளர்களுக்கு சில பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளனர். 

உணவு பணியாளர்கள் கையுறை தலைக்கவசம் மற்றும் முககவசம் அணிந்து இருத்தல் மிக அவசியமானது. கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல் வேண்டும். தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி ஆகும் தேதி அச்சிடப்பட்ட உணவுப் பொருள்களை விற்பனை செய்யப்பட வேண்டும்.

உணவகத்தில் எலி, கரப்பான் பூச்சிகள் வராத வண்ணம் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உரிமம் மற்றும் பதிவு சான்று கட்டாயமாக பெற வேண்டும். ஆண்டு (வருமானம் 12 லட்சத்திற்குள் ரூபாய் 100 ஆண்டு வருமானம் 12 லட்சத்திற்கும் மேல் ரூபாய் 2000 உரிமம்).


இந்த அறிவிப்பு குறித்து மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ் பாபு கூறுகையில்... திருச்சி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக தற்போது தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றனர். அதுமட்டுமின்றி ஒவ்வொரு நாளும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சில தகவல்களை பகிரவும் முயற்சித்து வருகின்றோம். 

உணவகங்களில் உணவு கலப்படங்கள் குறித்து புகார் அளிப்பதற்கு 9444042322 என்ற எண்ணிற்கு அழைத்து தெரியப்படுத்தலாம். அதுமட்டுமின்றி எங்களுடைய வாட்ஸ்அப் நம்பர் மூலமும் புகார்களை நேரடியாக அனுப்பலாம் புகார்கள் நிரூபிக்கப்படும் எனில் அந்த நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve