திருச்சி காவேரி பெண்கள் சுயநிதி கல்லூரி TCS நிறுவனத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம்

திருச்சி காவேரி பெண்கள் சுயநிதி கல்லூரி TCS நிறுவனத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம்

திருச்சி காவிரி பெண்கள் சுயநிதி கல்லூரி, TCS நிறுவனத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இதன்மூலம் கல்லூரியில் இளங்கலை கணினி அறிவியல் பாடத்திட்டத்தில் Bsc Computer Science Connitive System என்ற பாடப்பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளனர். 

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் :

டிசிஎஸ் நிறுவனம் காவேரி  பெண்கள் கல்லூரியோடு ஏற்படுத்திக்கொள்ள இந்த ஒப்பந்தம் மார்ச் மாதம் 2021 முதல் 2024 பிப்ரவரி 29 ஆம் தேதி வரை மட்டுமே. கல்லூரி நிர்வாகத்தில் TCS நிறுவனம் எவ்விதத்திலும் தலையிடாது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மிக முக்கிய நோக்கமே இன்றைய கால தொழில்நுட்பங்கள் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு அவர்களுடைய எது வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவது. பாடப்பிரிவுகள் தேர்ந்தெடுக்கும் போது கல்லூரி நிர்வாகம் டிசிஸ் நிறுவனத்தோடு கலந்தாலோசிக்ககும். இந்தப் பாடத் திட்டத்திற்காக எல்லா ஆசிரியர்களையும் மாணவர்கள் தேர்ந்தெடுத்துவிடவில்லை. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கு சில விதிமுறைகளை பின்பற்றப்பட உள்ளன. 

கல்வி நிறுவனத்தில் முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் 5 ஆண்டு அனுபவம் உடையவர்கள் மட்டுமே இந்த பாடப்பிரிவு கற்பிக்க தேர்வு செய்யப்பட உள்ளனர். அதுமட்டுமின்றி அவர்கள் தற்கால  தொழில்நுட்பங்களில் அதிக ஆர்வமும் புலமையும் வாய்ந்தவர்களாக இருப்பது அவசியமாகிறது. இந்த பாடப்பிரிவு  ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி டிசிஎஸ் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளனர். Train the Trainer Programe (TTT). இந்த பயிற்சியில் இந்த சிறப்பு வகுப்புகள் கல்லூரி நிர்வாகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மட்டும் வழங்கப்படும்.

அதுமட்டுமின்றி இத்துறையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு மூன்று ஆண்டுகள் முடிவில்  வேலைவாய்ப்பினை அளிப்பதற்காக ஒப்பந்தமிட்டுள்ளனர். டிசிஎஸ் நிறுவனத்தில் இருக்க ஒரு தேவையான ஊழியர்களுக்கு ஏற்றவாறு இந்த தொழில்நுட்ப பிரிவுகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கல்வி கற்றுக் கொண்டு செல்லும் மாணவர்களுக்கு சிறந்த பங்களிப்பை அளிக்க இயலும் என்று நிறுவனம் சார்பில் தெரிவித்துள்ளனர். நடைமுறையில் தற்போது இருக்கும் பிசிஏ, பிகாம், பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் இன்றைய கால பொருளாதார சந்தைகளில் மாணவர்கள் பலர் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் முன்னெடுத்து செல்வதற்கான சில மாற்றங்களை செய்து உள்ளோம்.


எடுத்துக்காட்டு உதாரணமாக Bcom (prefestional accounting) விருப்பப் பாடமாக தேர்வு செய்துகொள்ளலாம். இப்படி 3 துறைகளிலும் ஒரு சிறப்பம்சங்களை விருப்பப்பாடமாக சேர்த்துள்ளோம். இதன் மூலம் அவர்களுடைய கல்வித்திறன் மேம்படுவதோடு தற்கால தொழில்நுட்பங்களை அவர்கள் கற்றுக் கொண்டு எதிர்காலத்தில் சிறந்த ஒரு வல்லுனர்களாக ஆவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்த 2021- 22 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில் சில மாற்றங்கள் நிறைய மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாக கல்லூரியின் முதல்வர் சுஜாதா தெரிவித்துள்ளார். 

                 காவிரி கல்லூரி முதல்வர் சுஜாதா

இதுபற்றி அவர் கூறுகையில்... பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் இன்னும் வழங்கப்படாத நிலையில், மாணவர் சேர்க்கைக்கான புதிய வழிமுறைகளை பின்பற்றலாம் என்று கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. எனவே பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சமர்பிக்கலாம். மாணவ சேர்க்கைக்கான  விண்ணப்பங்கள் திங்கள்கிழமை முதல் 21.06.2021 கல்லூரியின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve