Food truck கலாச்சாரம்  - கலக்கும்  பட்டதாரி இளைஞர்கள்!! 

Food truck கலாச்சாரம்  - கலக்கும்  பட்டதாரி இளைஞர்கள்!! 

எதை  செய்கிறோமோ அதை விரும்பி செய்தால் எப்போதும் வெற்றி நிச்சயம் தான் ."பிடித்ததை பிடித்தவர்களுடன் இணைந்து செய்யும் போது அது கூடுதல் வெற்றியே தேடி தரும்", அப்படி தான் நாங்கள் மூவரும் இன்று வெற்றி கண்டுள்ளோம் என்கிறார்  விக்னேஷ்.
 யார் இந்த மூவர் என்று அறியும் பொழுது தான் இவர்களுக்கு பின்னால் இருக்கும் சுவாரசியம் மிக்க கதையும் நம்மை உற்சாகமூட்டுகிறது. விக்னேஷ் நித்தின், பிரவீன் மூவரும் ஒன்றாக இளங்கலை (Computer application)படித்தவர்கள்  விக்னேஷ் ,நித்தின்  இருவரும்   பெங்களூரு கோயம்புத்தூர் என தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்க பிரவீன் தன்னுடைய முதுகலை(MBa)  படிப்பை தொடர்ந்துள்ளார் .தனியாக தொழில் தொடங்குவது பற்றி மூவரும் ஆலோசித்தப்போது    என்ன தொழில் அது எவ்வாறு அவர்களை வாழ்வில் வெற்றியடைய செய்தது  என்பதைப்பற்றிய விக்னேஷ் அவர்களே நம்மிடம் உற்சாகமாக பகிர்ந்துகொண்டார் .

கொரோனா காலத்தில் எல்லா தனியார் நிறுவனங்களிலும் ஊதியக் குறைப்பு நடைபெற்றதை அனைவரும் அறிந்ததே அதில் நாங்களும் பாதிக்கப்பட்டோம்  எனவே இந்த ஊதியம் வாழ்க்கைக்கு போதாது என வேலையை விட்டு விடலாம் என முடிவு செய்தபோது தான் தனியாக தொழில் தொடங்குவது பற்றி மூவரும் முடிவு செய்தோம்.  


 நாங்கள் மூவரும் நண்பர்கள் இளங்கலை படிப்பு முடித்துவிட்டு வேலை செய்ய தனியார் நிறுவனங்களுக்கு சென்றுவிட்டோம் . ஆனால் புதிய கட்டுப்பாட்டால் எங்கள் நிலைமை சரியாக இல்லாத போது நாங்கள் தனியாக தொழில் தொடங்கலாமா என்று முடிவுசெய்தோம் . அப்போதுதான் இந்த உணவு வண்டி(Food truck)  என்ற ஐடியா எங்களுக்கு தோன்றியது ஒரு ரெஸ்டாரன்ட் ஆரம்பிப்பதை விட இதற்கு குறைந்த செலவு அதுமட்டுமின்றி இன்றைய கால இளைஞர்களுக்கும் மக்களுக்கும் துரித உணவுகள் மீது ஆர்வம்அதிகம் என்பதால்  எங்களுக்கு  இதையே செய்யலாம் என்ற ஊத்வேகம் எழுந்தது  Street Mafia food cart    என்ற பெயரில் தொடங்கினோம்.  

இந்தகொரோனா  காலத்திற்கு முன்பு 5 முதல் 4 உணவு வண்டிகளில் (Food truck)நடைமுறையில் இருந்தது. ஆனால் இப்பொழுது 20க்கும் மேற்பட்ட உணவு வண்டிகள்  உருவாகிவிட்டன, இதில் நாம் எவ்வாறு சிறப்பாக செய்கிறோம் எவ்வாறு  வாடிக்கையாளர்களுக்கும் மகிழ்ச்சி அளித்து அவர்களுக்கு பிடித்தவற்றை கொடுக்கிறோம் என்பதில்தான் வித்தியாசம் இருக்கிறது அதுதான் நமக்கு வெற்றியைத்தேடித்தரும் என முழுமையாக நம்பினோம் shawarma juices,dosa, barbecue meats போன்ற துரித உணவுகளை அதிகம் மக்கள் விரும்புவதால் அதில் அதிக கவனம் செலுத்தி நல்ல சுவையோடு கொடுத்திட முடிவுசெய்தோம் .
 திருச்சி பொறுத்தவரை 20க்கும் மேற்பட்ட உணவு வண்டிகள் செயல்பட்டு வருகின்றன.

இதை ஆரம்பிப்பதற்கு fssai  லைசென்ஸ் மற்றும் காவல்துறையிடம் அனுமதியும் பெற வேண்டும் .நாங்கள்  எடுத்துக் கொண்ட இந்த முயற்சி மிகவும் எளிமையாகவும் மேலும்    முதலீடு செய்வதற்கு ஏதுவாகும் இருந்ததால் இதை தேர்வு செய்தோம். மேலும் இதில் பணிபுரிய  இரண்டிலிருந்து ஐந்து நபர்கள் இருந்தால்  போதுமானது தான். மக்களுக்கு பிடித்தது அவர்கள் விரும்பிய நேரத்தில் கொடுத்தாலே நமக்கு போதும் என்று முடிவு செய்தோம்நிறைவாக இன்று வாழ்வை மகிழ்ச்சியோடு பயணித்துக்கொண்டிருக்கிறோம் என்றார் .

வாழ்வில் பிடித்ததை தன்னம்பிக்கையோடு செய்தால் வெற்றி என்பதற்கு இந்த நண்பர்கள்  இளைய சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாய் வாழ்கின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH