திருச்சி சாரநாதன் கல்லூரியின் புதிய கிரிக்கெட் மைதானம்

திருச்சி சாரநாதன் கல்லூரியின் புதிய கிரிக்கெட் மைதானம்

திருச்சி சாரநாதன் கல்லூரியின் புதிய கிரிக்கெட் மைதானம்!

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கிரிக்கெட் சங்கத்தால் ஆண்டுதோறும் 225 லீக் போட்டிகள் நாக் அவுட் போட்டிகள் பள்ளிகளுக்கு இடையேயான நாக்-அவுட் லீக் போட்டிகள்  மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்டங்களுக்கு இடையிலான மாநில அளவிலான போட்டிகள் உட்பட 350க்கும் அதிகமான போட்டிகள் நடைபெறுகின்றன.

சாரநாதன் பொறியியல் கல்லூரியில் திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கம் எண்ணற்ற கிரிக்கெட் போட்டிகளை நடத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்கும் சென்னை வீரர்களுக்கு கிடைக்கும் பயிற்சி வசதிகள் அனைத்தும் திருச்சி மாவட்டத்தில் உள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக அனைத்து மாவட்ட கிரிக்கெட் சங்கம் கிரிக்கெட் போட்டிகளை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. மாவட்ட அளவிலான போட்டிகள் மாநில அளவிலான போட்டிகள் மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் நடத்தும் வகையில் டர்ப் விக்கெட் அமைந்துள்ளது.

கல்லூரி செயலாளர் எஸ் .ரவீந்திரன் புதிய மைதானத்தையும் கல்லூரி செயற்குழு உறுப்பினர் குழந்தை நல மருத்துவர் மாத்ருபூதம் மாவட்ட கிரிக்கெட் சங்க துணை தலைவர் எர்னஸ்ட் ரவி ,எம். மீனாட்சிசுந்தரம் ,பிரேமநாதன் ,பிரதீப்,செயலாளர்கே.சஞ்சய் மற்றும் இணைச்செயலாலர் டி.குமார் முன்னிலையில் திறந்து வைத்தனர் .

திருச்சி பஞ்சப்பரில்  உள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரியில் இரண்டு மைதானங்கள்  உள்ள நிலையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட கிரிக்கெட் சங்க தொழில்நுட்ப ஆலோசனைகளின் படி மூன்றாவதாக புல்தரை கிரிக்கெட் ஆடுகளத்தில் 5 மீட்டர் இடைவெளியில் 2 விக்கெட் உடன் புதிய மைதானம் ஞாயிறு அன்று திறக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

இளைய தலைமுறை கிரிக்கெட்டில்  ஆர்வம் எப்போதும் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. நடராஜன் போன்ற தமிழ்நாட்டு வீரர்களை  உலகிற்கு வெளிக்காட்டியயதுபோல் பல வீரர்களை உருவாக்கும் முயற்சியிலேயே இதுபோன்ற புதிய முயற்சிகளை மேற்கொள்கிறோம். உலக அளவில் நம் தமிழக வீரர்கள் சாதனை படைக்க வேண்டும் என்பதே  இதன் முக்கிய நோக்கமாகும்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH