மண்ணச்சநல்லூர் அருகே மணல் திருடிய 7 பேர் கைது -அதிமுக பிரமுகர் தப்பியோட்டம்

மண்ணச்சநல்லூர் அருகே மணல் திருடிய 7 பேர் கைது -அதிமுக பிரமுகர் தப்பியோட்டம்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர்  அருகே மாதவப்பெருமாள் ஊராட்சியில் பொதுப்பணித்துறை மூலம் மணல் குவாரி  கடந்த 2 மாதமாக செயல்படுகிறது.
   இந்த மணல் குவாரியில் அப்பகுதியைச சேர்ந்த அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் மண்ணச்சநல்லூர் ஒன்றிய துணைச் செயலாளர் மணல் குணா மூலம், மணல் திருடி லாரிகள் மூலம் திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு மணல. கடத்துவதாக போலீஸ் உயரதிகாரிகளுக்குதொடர்ந்து புகார்கள் சென்றன.

இதனடிப்படையில் திருச்சி மாவட்ட காவல். கண்காணிப்பாளர் தனிப் பிரிவு எஸ்ஐ நாகராஜ் தலைமையிலான போலீஸார் இன்று அதிகாலை மாதவப்பெருமாள் ஊராட்சியில் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டிருந்த  7 பேரை கைது செய்தும், 8 மாட்டு வண்டிகளையும், சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான எஸ்.பியின் தனிப்பிரிவு போலீசார் மடக்கி பிடித்து, மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

   இதில் தப்பியோடிய அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை ஒன்றிய துணைத்தலைவர் மணல் குணா , நொச்சியம் பகுதியைச் சேர்ந்த ரவி உள்ளிட்ட மூவர்  தப்பியோடினர்.

இந்த திருட்டு சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் இளவரசன் ஐபிசி 379 மற்றும் மைன்ஸ் மினரல் ஆக்ட் பிரிவுகளின் வழக்கு பதிந்து நொச்சியம் பகுதியைச் சேர்ந்த ரவி, கோபிநாத், லோகேஸ்வரன், லட்சுமணன், , ரஞ்சித் குமார், மற்றும் முசிறி அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரஜினி ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

மணல் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட மணல் குணா வுக்கு சொந்தமான மாடு மற்றும் மணல் அள்ள பயன்படுத்திய மாட்டு வண்டி உள்ளிட்ட 8 வண்டி, மற்றும் 6 செல்போன்கள், 3 டூ வீலர்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தும், தப்பியோடிய மணல் குணாவை மண்ணச்சநல்லூர் போலீஸார் தேடி வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH