திருச்சி மாநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் மாடுகள் திருடும் கும்பல் - நடவடிக்கை எடுக்க காவல் ஆணையரிடம் மனு

திருச்சி மாநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் மாடுகள் திருடும் கும்பல் - நடவடிக்கை எடுக்க காவல் ஆணையரிடம் மனு

திருச்சி மாநகர் பகுதியில் ஆடு, மாடு போன்ற வளர்ப்பு கால்நடைகள் அதிகளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கால்நடைகள் மேய்சலுக்காக சாலையில் ஆங்காங்கே திரிகின்றன.

இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலும், மேய்சலுக்கு திரியும் பசு மற்றும் காளை மாடுகள் சாலையின் ஒரத்தில் படுத்து கிடப்பதை அவ்வப்போது காணமுடியும். இதனை கண்ட மர்ம நபர்கள் பீமநகர், சோமரசம்பேட்டை, கே.கே.நகர் உள்ளிட்ட திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலை ஓரத்தில் நிற்கும் கறவை மாடுகளை திருடி செல்கின்றனர்.

இதுப்பற்றி அறிந்த மாட்டின் உரிமையாளர்கள் சிசிடிவி கேமரா காட்சிகளை சேரித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனால் இது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், தொடர்ந்து மாடுகள் திருடு போவதால் மாடுவளர்ப்பர்கள் இன்று திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து மாட்டின் உரிமையாளர் கூறுகையில்.... திருச்சி மாநகரில் ஒரு மாதத்தில் 300 மாடுகள் திருடப்பட்டுள்ளது. குறிப்பாக கறவை மாடுகள், ஜல்லிக்கட்டு காளை தேர்வு செய்து திருடர்கள் திருடுகின்றனர். இதில் 4 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் மாடுகளை சரக்கு வாகனங்களில் ஏற்றுவது தெரியவந்தது. 1 மாடு 50 அல்லது 80 ஆயிரத்து விலை போவதால் மாநகரில் அதிகளவில் மாடுகள் திருடப்பட்டுள்ளன.

மாடு திருடும் கும்பலை கண்டு விரட்டிய பொதுமக்களை பயங்கர ஆயுதங்களுடன் திருடர்கள் தாக்குகின்றனர். இதுமட்டுமின்றி திருடிய மாடுகளை கண்டுபிடிக்க வேண்டும், திருடர்களை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH