திருச்சி மாநகர போக்குவரத்து காவலர்களுக்கு பேட்டரி மூலம் ஒளிரும் பல்புகளுடன் பாதுகாப்பு உடை

திருச்சி மாநகர போக்குவரத்து காவலர்களுக்கு பேட்டரி மூலம் ஒளிரும் பல்புகளுடன் பாதுகாப்பு உடை

சென்னைக்கு நிகராக  திருச்சியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருகிறது. இதற்காக அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சாலைகளில் 2 அல்லது 3 போக்குவரத்து காவலர்கள் பணியில் உள்ளனர். இந்நிலையில் திருச்சி மாநகரில் போக்குவரத்து காவலர்களின் பல்வேறு வசதிகளை மாநகர காவல் ஆணையர் செய்து வருகிறார்.

ஏற்கனவே கோடைகாலங்களில் பகலில் போக்குவரத்து சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் போலீசாருக்கு வெளியிலின் தாக்கத்தில் இருந்து சமாளிக்க பேப்பர் தொப்பி, ஜூஸ் வழங்கப்படுவது வழக்கம். இதே போன்று இரவு நேரங்களில் பணியாற்றும் போக்குவரத்து காவலர்களுக்கு ஒளிரும் பட்டை கொண்ட ( Reflect jacket ) ஜாக்கெட் வழங்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இரவில் பணியிலுள்ள போக்குவரத்து காவலர்களுக்கு ஒளிரும் பட்டை கொண்ட ஜாக்கெட்டில் பேட்டரி மூலம் ஒளிரும் பல்புகள் கொண்ட பாதுகாப்பு கவசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஜாக்கெட்டின் முன்பும், பின்பும் வரிசையாக பல்புகள் விட்டு விட்டு ஒளிரும். இதனால் வாகன ஓட்டிகளை எச்சரிக்கை செய்யும் விதமாகவும், போக்குவரத்து காவலர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அரணாகவும் உள்ளது.

இந்த புதுவிதமான முயற்சி போக்குவரத்து காவலர்கள் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இரவு நேரங்களில் வாகன சோதனையில் ஈடுபடும் காவலர்களுக்கு இந்த ஜாக்கெட் அணிவதால் பாதுகாப்பு கவசம்மாக உள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH