திருச்சி அருகே டிராக்டர் மீது லாரி மோதி விபத்து -ஒரே கிராமத்தைச் சேர்ந்த 3 பெண்கள் சம்பவ இடத்தில் பலி

திருச்சி அருகே டிராக்டர் மீது லாரி மோதி விபத்து -ஒரே கிராமத்தைச் சேர்ந்த 3 பெண்கள் சம்பவ இடத்தில் பலிதிருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த புள்ளம்பாடி பகுதி அலுதலைப்பூர் கிராமத்தை சேர்ந்த 20
பெண்கள் டிராக்டர் வாடகைக்கு எடுத்து கொண்டு மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள அரிசி ஆலைக்குச் சென்று தங்களது குடும்பத்திற்கு தேவையான 25 கிலோ எடை கொண்ட 250 மூட்டைகளை மொத்தமாக கொள்முதல் செய்து டிராக்டரில் எடுத்துச் சென்றுள்ளனர் .டிராக்டரில் ஏழு பெண்கள் மற்றும் ஒரு ஆண் மற்றும் வந்துள்ளனர், மற்றவர்கள் பேருந்தில் தங்களது சொந்த கிராமத்திற்கு சென்றுள்ளனர் .
இந்நிலையில் டிராக்டர் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் புள்ளம்பாடியை அடுத்த இருதயபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திருச்சியில் இருந்து டால்மியா நோக்கி சிமெண்ட் ஏற்றுவதற்காக சென்று கொண்டிருந்த லாரி எதிர்பாராத விதமாக டிராக்டர் பின்பக்கம் மோதியது இதில் டிராக்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட கண்ணையன் மனைவி சாந்தி ,பெருமாள் மனைவி தெய்வநாயகி , ராஜலிங்கம் மனைவி ராசாம்பாள் ஆகிய மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள் .
மேலும் படு காயமடைந்த ராஜலிங்கம் என்பவர் உட்பட கமலம் , ராமாயி , பர்வதம் , மூன்று பெண்கள் திருச்சியில் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக டிராக்டர் ஓட்டுனர் எந்தவித காயமின்றி உயிர் தப்பினார்.மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த லால்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் தினேஷ் குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் உடலை மீட்டு
உடற்கூறு ஆய்விற்காக திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிமெண்ட் லாரியை ஒட்டி வந்த ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.ஒரே கிராமத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision