காலாவதியான பீர் பாட்டிலை விற்பனை செய்த திருச்சி மதுபான கடை - வாடிக்கையாளர் அதிர்ச்சி!!

காலாவதியான பீர் பாட்டிலை விற்பனை செய்த திருச்சி மதுபான கடை - வாடிக்கையாளர் அதிர்ச்சி!!

Advertisement

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஏப்ரல் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு மதுபான கடைகள் செயல்படாது என தமிழக அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து 3ம் தேதியான நேற்று தமிழகம் முழுவதும் மது கடைகளில் கூட்டம் அலைமோதியது. தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை வாங்கி வைப்பதற்காக குடிமகன்கள் நீண்ட வரிசையில் நின்றும் அடித்து பிடித்துக்கொண்டு சரக்குகளை வாங்கி சென்றனர்.

Advertisement

அந்தவகையில் திருச்சி உறையூர் பகுதியில் உள்ள இரண்டாவது மதுபான கடையில் அதே உறையூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் மினி பீர் இரண்டை வாங்கியுள்ளார். கூட்ட நெரிசலில் அதனை எப்படியோ வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்று பார்த்தபோது அது காலாவதியாகி உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த காலாவதியாகிய பீர் பாட்டில் கடந்த வருடம் ஏழாம் மாதத்தில் தயாரிக்கப்பட்டது என்று தெரியவந்துள்ளது. உடனடியாக யூபில் எண்ணிற்கு அழைப்பு விடுத்தபோது அவர்களிடம் இருந்து சரியான பதில் எதுவும் கிடைக்காததால் பாட்டிலை தூக்கிபோட்டுவிட்டார்.

மதுபான கடையில் பில் எதுவும் கொடுக்காததால் எந்த கடையில் வாங்கினோம் என்பதை கூட சொல்ல முடியாத நிலையில் தான் உள்ளோம். காசு கொடுத்து வாங்கும் பொருளுக்கு தரமான பொருள் கிடைப்பதில்லை என்றும், காசுகளில் மட்டுமே குறியாக இருக்கும் இவர்கள் தேதியையும் சரிபார்த்து கொடுத்திருக்கலாம் என்றும், இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே என்னுடைய கோரிக்கையாக உள்ளது" என்றார்

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81