இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா தங்கியிருந்த அறையில் மர்மநபர் -பரபரப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா தங்கியிருந்த  அறையில் மர்மநபர் -பரபரப்பு

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா தங்கியிருந்தார். அவர் அறையின் கதவை பூட்டிவிட்டு வெளி சென்ற நிலையில் கர்நாடகவை சேர்ந்த மர்ம நபர் உள்ளே புகுந்தார்.


அறையின் உள்ளே சென்று அவர் அமர்ந்து எதையோ எழுதிக் கொண்டிருந்துள்ளார்.டி.ராஜா அறைக்கு திரும்பி வந்து,  கதவை திறந்த போது மர்ம நபர் பிடிபட்டார். எப்படி இவர்கள் பூட்டி வைத்திருந்த சாவி வேறு நபரிடம் ஹோட்டல் நிர்வாகத்தினர் கொடுத்தது எப்படி என்று அதிர்ச்சி ஆனார்கள் கம்யூனிஸ்ட் கட்சியினர். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் அவரை சுற்றிவளைத்து வாக்குவாதம் செய்தனர்.ஹோட்டல் ஊழியர்கள் அறைக்கதவு சாவியை மாற்றி கொடுத்து விட்டதாக விளக்கமளித்தனர். அதனை ஏற்றுக்கொள்ள கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நேற்று திமுகவுடன் தேர்தல் தொகுதி பங்கீடு முடிவடைந்து இன்று மாநில நிர்வாக குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்நிலையில் தேசிய பொதுச் செயலாளர் ராஜா தங்கியிருந்த அறையில் மர்ம நபர் உள்ளே புகுந்து அமர்ந்திருந்தது அவர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH