முளை சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள் தானம் - அரசு மருத்துவர்கள் மரியாதை
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, நரியம்பட்டியைச் சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க ஆண் தலையில் அடிபட்டு, திருச்சிராப்பள்ளி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (09.01.2025) அன்று காலை 06.30 AM மணி அளவில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கு பிறகு (10.01.2025) அன்று மாலை 05:50 PM மணியளவில் முளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டு, உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதனை உணர்ந்த இறந்தவரின் உறவினர்கள் அவருடைய உடல் உறுப்புகளை தானம் அளிக்க முன் வந்தார்கள். மேலும் அவருடைய உறுப்புகளான கல்லீரல், கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் தோல் ஆகிய உறுப்புகளை தானம் செய்தனர்.
Transtan வழிகாட்டுதலின்படி, உடல் உறுப்பு வேண்டி பதிவு செய்தவர்களின் வரிசையின்படி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மூன்று வருடங்களாக தொடர்ச்சியாக இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பெற்று வந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நோயாளிக்கு (11.01.2025) அன்று
இம்மருத்துவமனை முதல்வர் பேர.மரு.குமரவேல் MS., Ortho., D.Ortho., DNB Ortho., Ph.D., ACME தலைமையில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவக்குழு மூலம் இந்த அறுவை சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சை மரு.ஜெயபிரகாஷ் நாராயணன், MS., Mch., மற்றும் குழுவினர், சிறுநீரக மருத்துவ குழு மருத்துவர் மரு-நூர்முகமது, MD., DM., மற்றும் குழுவினர், மயக்கவியல் மருத்துவர் மரு.சந்திரன், MD, மற்றும் குழுவினர் மற்றும் செவியலியர் குழு,
செவிலியர் உதவியாளர் குழு ஆகியோர் மூலம் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் முற்றிலும் இலவசமாக, மாற்று சிறுநீரகம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு நோயாளி நலமுடன் உள்ளார். இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையானது நமது மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 37-வது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஆகும்.
மற்றொரு சிறுநீரகம் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒருவருக்கும், கல்லீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும், தோல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது. இரு கண்விழிகளும் இம்மருத்துவமனையில் பயனாளிகளுக்கு தானமாக வழங்க பெறப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision